வந்துருச்சு பிகில் டீசர் அப்டேட்.. தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம்👇🏾🌐

வந்துருச்சு பிகில் டீசர் அப்டேட்.. தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம்👇🏾🌐
தளபதி விஜய் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் பிகில் திரைப்படம் வருகிற தீபாவளி அன்று வெளியாகிறது. இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். தெறி, மெர்சல் ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லி இப்படத்தை இயக்குகிறார். பிகில் படத்தினை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

பிகில் படத்தின் “சிங்கப் பெண்ணே” பாடல் பெண்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 1 மாலை 6 மணி அளவில் பிகில் படத்தின் இரண்டாவது சிங்கிள் “வெறித்தனம்” ரிலீசானது.

ரிலீசான நொடி முதலே, “வெறித்தனம்”என்ற பாடல் வெறித்தனமாக யூடியூப் இன் பழைய ரெக்கார்டை எல்லாம் அடித்து நொறுக்கியது. தற்போது இப்பாடல் 8மில்லியன் வியூஸ் மற்றும் 8,50,000 லைக்குகளை பெற்று தொடர்ந்து ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. இப்பாடல் தர லோக்கலாக இருக்குமென்று அதுவும் ஏ ஆர் ரகுமான் இசையில் இப்படி ஒரு பாடலை என்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து பிகில் படத்தின் டீசர் வருகின்ற செப்டம்பர் 21-ஆம் தேதி வெளியிடப்படும் என்று சினிமா வட்டாரங்களில் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இதற்கு முன்னதாக அட்லீ, விஜய் இணைந்த மெர்சல் படத்தின் டீசர் இதே தேதியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.🌐