வயிற்று கோளாறை போக்கும் இஞ்சி துவையல்

தேவையானப் பொருட்கள் :

இஞ்சி – 1/2 கப்
தேங்காய் துருவல் – 1/2 கப்
காய்ந்த மிளகாய் – 2
உளுத்தம்பருப்பு – 1 ½  மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – 4 ஈர்க்கு
பெருங்காயம், புளி – சிறு நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை :

இஞ்சியைத் தோல்சீவி நன்றாகக் கழுவி சிறுதுண்டுகளாக்கிக் கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.

அடுத்து அதில் இஞ்சித் துண்டுகள், கறிவேப்பிலை சேர்த்து மேலும் சிறிது நேரம் பச்சை வாசனை போகும்வரை வதக்கி இறக்கவும்.

அடுத்து தேங்காயைத் துருவல், புளி, பச்சை மிளகாயைக் சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்,

ஆறியதும் உப்பு சேர்த்து சிறிது சிறிதாக நீர்தெளித்து கெட்டியாக கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.

காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பை வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். இஞ்சி கறிவேப்பிலையை தனியாக வதக்கி, தேங்காய்த் துருவல் புளி, உப்பு, வறுத்ததிலிருந்து காய்ந்தமிளகாய் மட்டும் சேர்த்து அம்மியில் வைத்து கரகரப்பாக அரைத்து கடைசியில் வறுத்த உளுத்தம் பருப்பையும் வைத்து ஒன்றிரண்டாக அரைபடுமாறு ஒரு ஓட்டு அரைத்து எடுத்தால் சுவையாக இருக்கும்.

இந்தத் துவையலில் நல்லெண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளிப்பது நல்லது என்று மருத்துவ உணவுக் குறிப்பு சொல்கிறது.

Leave a comment

Your email address will not be published.