துபாய் : யுஏஇ,சவூதி அரேபியா, கத்தார்,குவைத் உள்ளிட்ட பல்வேறு வளைகுடா நாடுகளில் இன்று ஈகை பெருநாள் கொண்டாடப்பட்டது. இதனையோட்டி இன்று அதி காலை பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. லட்சக்கணக்கான இஸ்லாமிய மக்கள் தொழுகையில் பங்கேற்றனர்.
மேலும் ஒருவருக்கொருவர் சந்தித்து நல்வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர் ஐக்கிய அரபு அமீரகத்தின்(யுஏஇ) தலைநகர் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அல்அய்ன், அஜ்மான், ஃபுஜைரா, உம்மல் குய்ன் மற்றும் ராசல்கைமா ஆகிய இடங்களில் பெருநாள் கொண்டாடப்பட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது.
துபாய் நகரில் உள்ள தேரா ஈத்கா திடலில் மக்கள் பெருநாள் சிறப்புத் தொழுகையை நிறைவேற்றினர் அதி.காலை முதலே மக்கள் ஈத்கா திடலை நோக்கி அலை மோதத் தொடங்கினர். தக்பீர் ஒலி முழங்க அதிகாலை தொழுகை ஆரம்பித்தது. தொழுகை முடிந்ததும் குத்பா பேருரை நடைபெற்றது. இறுதியாக மக்கள் ஒருவரை ஒருவர் தழுவி பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.