வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு தளத்துக்கான பீட்டா பதிப்பில் புதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

புதுடெல்லி:
வாட்ஸ்அப் புதிய பீட்டா பதிப்பில் (2.18.179) உங்களுக்கு வரும் மெசேஜ்களை மற்றவர்களுக்கு ஃபார்வேர்டு செய்யும் போது லேபெல் செய்யப்படுகிறது. அந்த வகையில் வாட்ஸ்அப்பில் பகிர்ந்து கொள்ளப்படும் ஃபார்வேர்டு மெசேஜ்களில் இனி ஃபார்டுடெடு (Forwarded) என்ற லேபெல் இருக்கும்.
இந்த புதிய அம்சம் மூலம் இனி உண்மையான மெசேஜ்கள் மற்றும் ஃபார்வேர்டு செய்யப்பட்ட மெசேஜ்களுக்கு வித்தியாசப்படுத்திக் கொள்ள முடியும். இந்த லேபெல் மெசேஜை அனுப்புவோர் மற்றும் அதனை பெறுவோருக்கும் காணப்படும். முன்னதாக பீட்டா செயலியில் மீடியா விசிபிலிட்டி அம்சத்தை மறைக்கும் வசதி வழங்கப்பட்டு இருந்தது. இது கேலரியில் இருக்கும் வாட்ஸ்அப் மீடியாவை மறைக்கவோ அல்லது காண்பிக்கவோ செய்யும்.
இந்த அம்சத்துடன் புதிய கான்டாக்ட் ஷார்ட்கட் அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. இது பீட்டா பயனர்களை மிக எளிமையாக கான்டாக்ட்களை சேர்க்க வழி செய்கிறது.