வாட்ஸ்அப் செயலியில் புதிய பிழை – இது என்ன செய்யும் தெரியுமா..?

வாட்ஸ்அப் செயலியில் புதிய பிழை கண்டறியப்பட்டுள்ளது. இது என்ன செய்யும் என்ற தகவலை தொடர்ந்து பார்ப்போம்.

புதுடெல்லி:
வாட்ஸ்அப் செயலியில் புதிய பிழை கண்டறியப்பட்டுள்ளது. இது செயலியில் நீங்கள் பிளாக் செய்தவர்களையும் உங்களுக்கு குறுந்தகவல் அனுப்ப வழி செய்கிறது.
தற்சமயம் கண்டறியப்பட்டு இருக்கும் புதிய பிழை வாட்ஸ்அப் செயலியில் நீங்கள் பிளாக் செய்த கான்டாக்ட்கள், எப்படியோ உங்களுக்கு குறுந்தகவல் அனுப்ப முடிகிறது. புதிய பிழையை வாட்ஸ்அப் உறுதி செய்யவோ இதை சரி செய்வதற்கான அப்டேட் வழங்குவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
எனினும் நீங்கள் பிளாக் செய்தவர்கள் உங்களுக்கு குறுந்தகவல் அனுப்பாமல் இருக்க இந்த வழிமுறையை பின்பற்றலாம். முதலில் நீங்கள் பிளாக் செய்த கான்டாக்ட்-ஐ அன்பிளாக் செய்து பின் மீண்டும் பிளாக் செய்யலாம். இவ்வாறு செய்தால் பிளாக் செய்த கான்டாக்ட் உங்களுக்கு அனுப்பும் குறுந்தகவல்கள் எதுவும் வராது.
பிளாக் செய்த கான்டாக்ட்களுக்கு குறுந்தகவல் அனுப்புவதோடு இந்த பிழை அவர்களின் ஸ்டேட்டஸ், ப்ரோஃபைல் தகவல் உள்ளிட்ட தகவல்களையும் பார்க்க வழி செய்கிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பிளாக் செய்த கான்டாக்ட், பிளாக் செய்யாத கான்டாக்ட் பெறும் அனைத்து அம்சங்களையும் பெற முடிகிறது. இந்த பிழை ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த வாரம் வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்ட அப்டேட் வாட்ஸ்அப் க்ரூப்களில் டிஸ்க்ரிப்ஷன் சேர்ப்பது, க்ரூப் அட்மின்களுக்கு கூடுதலாக புதிய வசதிகள், மென்ஷன்ஸ் அம்சம் மற்றும் க்ரூப்களில் உள்ளவர்களை தேடும் அம்சங்களை வழங்கியது. சமீபத்தில் க்ரூப் வீடியோ காலிங் அம்சம் சர்வர் சார்ந்த அப்டேட் மூலம் வழங்கப்பட்டது.

Leave a comment

Your email address will not be published.