விமானம் வானில் பறந்து கொண்டிருந்தபோது லக்கேஜ் பகுதிக்குள் விமான பணிப்பெண் ஒருவர் படுத்திருந்ததை பார்த்து திகைத்துப்போனார்.

அமெரிக்காவின் விமானம் வானில் பறந்து கொண்டிருந்தபோது பயணி ஒருவர் தனது சூட்கேசை வைப்பதற்காக ‘லக்கேஜ்’ பகுதியை திறந்தார். அப்போது ‘லக்கேஜ்’ பகுதிக்குள் விமான பணிப்பெண் ஒருவர் படுத்திருந்ததை பார்த்து திகைத்துப்போனார். பயணிகளுக்கு வேடிக்கை காட்டுவதற்காக பணிப்பெண் இவ்வாறு செய்ததாக விமான ஊழியர்கள் கூறினர். ஆனாலும் இதனை சகித்துக்கொள்ளாத பயணி ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் இதுதொடர்பாக புகார் அளித்தார்.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அந்நிறுவனம் “வாடிக்கையாளர்களை சிரிக்க வைக்கும் நோக்கிலேயே பணிப்பெண் அவ்வாறு செய்தார். எங்கள் பணிக்குழுவினர் அவ்வப்போது இதுபோன்ற வேடிக்கைகளில் ஈடுபடுவது வழக்கம்தான் என்றார்கள்
@ நல்ல தமாஸு!🌐