விளையாட்டு சம்பந்தமான படத்தில் நடிக்க வேண்டும் என்ற விஜய்யின் நீண்ட நாள் ஆசை இந்த படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது.

🎥பெண்கள் கால்பந்தாட்டம் குறித்த கருவை கொண்டு உருவாகியுள்ள படம் நடிகர் விஜய்யின் *பிகில்* . விளையாட்டு சம்பந்தமான படத்தில் நடிக்க வேண்டும் என்ற விஜய்யின் நீண்ட நாள் ஆசை இந்த படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது.

இந்தப் படத்தில், விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். விஜய்யின் 64-வது படமான இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

இந்தப் படத்தை 2020-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

தளபதி 63 படத்தின் பணிகளை முடித்துக் கொண்ட பிறகு செப்டம்பர் மாதத்தின் முதல் வாரம் முதல் தளபதி 64 படப்பிடிப்பு பணிகளைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. 👇🏾🌐

👆இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார். ஒளிப்பதிவு பணிகளை சத்யன் சூர்யனும், படத்தொகுப்பு பணிகளை பிலோமின் ராஜும் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்த படத்தின் ஹீரோயின் யார் என்ற தகவல் மரமாகவே இருந்தது. இந்நிலையில், ராஷ்மிகா மந்தன்னா-விடம் தளபதி 64 பேச்சுவார்த்தை நடத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளது. எனவே, தளபதி 64 படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தன்னா நடிப்பது உறுதியாகியுள்ளது.🌐