வீடு வெள்ளத்தில் சூழப்பட்டுவிட்டது.

வெள்ளத்தால் சூழப்பட்டு வரும் எங்களது வீட்டிலிருந்து மனைவியையும், மகனையும் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்வதற்கான வழியை தேடுவதற்காக அவர்களை விட்டு சென்றேன். கிட்டத்தட்ட அரைமணிநேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது, வீடு வெள்ளத்தில் சூழப்பட்டுவிட்டது. எனது மனைவியையும், மகனையும் அங்கு காணவில்லை” என்று கூறுகிறார் லாரன்ஸ். தற்போது தனது பன்னிரண்டு வயது மகனை மட்டும் கண்டறிந்த அவர், வயநாட்டிலுள்ள பள்ளி ஒன்றில் ஏற்படுத்தப்பட்ட நிவாரண முகாமில் வசித்து வருகிறார். தனது மனைவி திரும்ப வருவாரா என்று லாரன்ஸ் காத்திருக்கும் முகாமில், ஐந்திற்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.🌐