வேலூரில் 🌞திமுக வேட்பாளர் 👤கதிர் ஆனந்த் வெற்றி🎊

வேலூரில் 🌞திமுக வேட்பாளர் 👤கதிர் ஆனந்த் வெற்றி🎊

✍ – மதன்

💸பணப்பட்டுவாடா காரணமாக 🗳தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, கடந்த aug 4-ம் தேதி வேலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடந்தது. 🌞திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த், 🌱அதிமுக சார்பில் ஏ.சி சண்முகம், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீப லக்‌ஷ்மி ஆகியோர் போட்டியிட்டனர்🎉. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை எண்ணப்பட்டன👍. காலை முதல் தொடர்ந்து முன்னிலையில் இருந்த ஏ.சி சண்முகம் திடீரென ஏழாவது சுற்று 👆வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் பின் தங்கினார்😳. இதனை அடுத்து கதிர் ஆனந்த், அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலைக்கு வந்தார். எனினும், திடீரென அவரது முன்னிலை வாக்கு வித்தியாசம் குறைந்தது. ⌚நிமிடத்திற்கு நிமிடம் வாக்கு வித்தியாசம் அதிகரித்தும் குறைந்தும் வந்ததால், 🗳தேர்தல் முடிவுகள் கடும் எதிர்ப்பார்ப்பை👀 ஏற்படுத்தியது. இறுதிகட்டம் வரை முன்னிலையில் இருந்த கதிர் ஆனந்த் 478855 வாக்குகள் பெற்று 8460 வாக்குகள்👆 வித்தியாசத்தில் வெற்றி🎉 பெற்றார்.