வேலூர் மக்களவை தேர்தலுக்கான பொறுப்பாளர்களாக 70 பேர் கொண்ட பொறுப்பாளர்களை திமுக அறிவித்து உள்ளது.

வேலூர் மக்களவை தேர்தலுக்கு திமுக 70 பேர் கொண்ட பொறுப்பாளர்களை அறிவித்தது. அதிமுக அதைவிட 3 மடங்கு அதிக பொறுப்பாளர்களை அறிவித்து உள்ளது.

வேலூர் மக்களவை தேர்தல்- அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.  சட்டமன்ற தொகுதி வாரியாக 209 தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அதிமுக அறிவித்து உள்ளது.  அவர்கள் அமைச்சர் கே.சி. வீரமணி, ரவி எம்.எல்.ஏ  ஆகியோர் மேற்பார்வையில் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அணைக்கட்டு- அமைச்சர் சி.வி.சண்முகம்

குடியாத்தம் – வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர் தங்கமணி

வேலூர்- அமைச்சர் செங்கோட்டையன்

ஆம்பூர் – கே.பி.முனுசாமி, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

கே.வி.குப்பம்- அமைச்சர் வேலுமணி