
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரிய வழக்கில் இரண்டாவது நாளாக வேதாந்தா குழுமம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் வாதிட்டார். அப்போது அவர், தூத்துக்குடி சிப்காட் தொழில் வளாகத்தில் மூன்று அனல் மின் நிலையங்கள் உட்பட 67 தொழிற்சாலைகள் உள்ள நிலையில் ஸ்டெர்லைட் ஆலை மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார். மாசு ஏற்படுத்தியதற்கு எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில் ஆலையை மூட உத்தரவிட முடியாது எனக் கூறிய மூத்த வழக்கறிஞர், அப்படி மாசு ஏற்படுத்தியிருந்தாலும், அதற்கு ஆலையை மூடுவது தீர்வாகாது எனவும் தெரிவித்தார். துப்பாக்கிச் சூடு சம்பவம் தவிர ஆலையை மூட வேறு எதுவும் இல்லை என்றார்.
