ஹீரோவாக நடிக்கும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன்

‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஹீரோவாக ஒரு படத்தில் நடித்துள்ளார்.

தருண் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கருப்பு காக்கா’. காமெடி கலந்த சஸ்பென்ஸ் த்ரில்லராக இந்தப் படம் தயாராகியிருக்கிறது. வசந்த் மற்றும் பிரகாஷ் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். டேனியல், ‘ராட்டினம்’ சுவாதி, ஜார்ஜ், அஞ்சலி ராவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

‘நான் கடவுள்’ ராஜேந்திரன், இந்தப் படத்தில் பிரதான வேடத்தில் நடித்துள்ளார். பேய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து கதை எழுதப்போன ஒருவரின் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதை. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய் மில்டன் வெளியிட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published.