‘ஹெல்மெட்களின் எடையைக் குறைத்தால், அதன் பயன்பாடு அதிகரிக்கும்!’- இது BIS கணக்கு

'ஹெல்மெட்களின் எடையைக் குறைத்தால், அதன் பயன்பாடு அதிகரிக்கும்!'- இது BIS கணக்கு

Bureau of Indian Standards (BIS) அமைப்பு, டூ-வீலர்களுக்குப் பயன்படுத்தப்படும் ஹெல்மெட்களுக்குப் புதிய கோட்பாடுகளை விதித்திருக்கிறது. அதன்படி வருகின்ற ஜனவரி 15, 2019 முதலாக, ஹெல்மெட்களின் அதிகபட்ச எடை 1.5 கிலோவில் இருந்து 1.2 கிலோவாக மாற்றப்பட உள்ளது. மேலும் காற்றோட்டத்தை அதிகரிக்கும் பொருட்டு, அதில் தேவையான Ventillation Hole-களை வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனுடன் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் அறிவுரைப்படி, ISI சான்றிதழ் பெறாத ஹெல்மெட்களை விற்பனை செய்வது சட்டவிரோதம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெல்மெட்

இதனால் சாலைஓரத்தில் இருக்கும் பெரும்பான்மையான கடைகளில் விற்பனை செய்யப்படும் தரமற்ற ஹெல்மெட்கள் மற்றும் ISI சான்றிதழ் பெற்ற தொழில்துறை ஹெல்மெட்களை வாகன ஓட்டிகள் பயன்படுத்துவதைப் படிப்படியாகக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஹெல்மெட்களை டூ-வீலர்களை இயக்கும்போது மட்டுமே பயன்படுத்த எதுவானவை என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, Open Face ஹெல்மெட்டைத் தடைசெய்து, Full Face வகை ஹெல்மெட்களை மட்டும் கட்டாயமாக்கி இருக்கலாமோ எனத் தோன்றுகிறது.

‘இந்தியாவில் டூ-வீலர்களை ஓட்டுபவர்கள் பயன்படுத்தும் Helmet, 75% முதல் 80% ISI சான்றிதழ் பெறாதவையாகவே இருக்கின்றன. தவிர சாலை விபத்துகளில் இறக்கும் நால்வரில் ஒருவர், டூ-வீலரில் பயணிப்பவராகவே இருக்கிறார். இந்தக் கோட்பாடுகளினால், ஹெல்மெட்டைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் சாலை விபத்துகளின் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் குறையும். மேலும் தரமற்ற மற்றும் போலி ஹெல்மெட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை இதனால் கட்டுப்படுத்தப்படும்’ எனக் கூறியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published.