🛑 கிரண்பேடியின் தண்ணீர் பேச்சு.. வளர்மதியை விட்டு விளாசித் தள்ளிய அதிமுக!🌐

🌍 புகழ் வாய்ந்த காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றிய ஒருவர் தண்ணீர் பற்றாக்குறை குறித்து எந்த நேரத்தில் எதைக் கூற வேண்டும் என்ற இங்கீதம் கூடத்தெரியாமல் வார்த்தைகளை அள்ளி வீசியிருப்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.காவிரி ஆற்று நீரில் தமிழகத்திற்கும், புதுச்சேரிக்கும் சேர வேண்டிய உரிய பங்கினைப் பெற்றுதர பாடுபட வேண்டிய இந்த நேரத்தில், தனது பொறுப்பை தட்டிக்கழிக்காமல் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செய்து கண்ணியம் காக்க வேண்டும் என்று அறிவுரையாக அல்ல அன்புரையாகக் கூறிக் கொள்கிறேன்” என வளர்மதி குறிப்பிட்டுள்ளார்.