சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத் குமார் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்தன் பின்னணி வெளியாகி இருக்கிறது.

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத் குமார் தனது மனைவி ராதிகாவை அழைத்துக் கொண்டு செலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்தன் பின்னணி வெளியாகி இருக்கிறது. ஆர்.கே.நகர் தேர்தல் நெருக்கடியில் நடிகர் சரத்குமாரையும் வளைத்தது வருமான வரித்துறை. சரத்குமாரிடம் விசாரணை செய்த அதிகாரிகள் மிகவும் நோகடித்துள்ளனர். ஜனவரி மாதம் சசிகலாவுக்கு ஆதரவு, பிப்ரவரியில் பன்னீருக்கு ஆதரவு, மார்ச்சில் தனித்துப் போட்டி, கடைசியாக தினகரனுக்கு ஆதரவு என அடிக்கடி நிலைப்பாட்டை மாற்றியது குறித்து துருவினர். நீங்கள் என்ன வாங்கினீர்கள்? எப்படி வாங்கினீர்கள், என்பதற்கான எல்லா ஆதாரங்களும் இருக்கிறது. எனவே, உள்ளதை உள்ளபடி சொல்லிவிடுங்கள். தினகரனிடம் வாங்கிய 5 கோடியும், எடப்பாடி பழனிச்சாமியிடம் வாங்கிய 2 கோடியும் எங்கே?
அதை மட்டும் சொல்லுங்கள், என்று வருமான வரித்துறையினர் நெருக்கியுள்ளனர். அதனால், 5 கோடி ராடான் நிறுவனத்தில் வந்த லாபம். இரண்டு கோடி சினிமா நண்பர் ஒருவரிடம் வாங்கிய கடன் என்று ஒரு தயாரிப்பாளர் பெயரை சொல்லி அப்போது சமாளித்து பார்த்தார் சரத்குமார். 👇🏾🌐
அத்துடன் சரத்குமாரை அனுப்பிவிட்டு, ராதிகாவின் நிறுவனமான ரேடான் டி.வி.யில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதனால் பயங்கர அப்செட்டான ராதிகா, ’என்னை ஏன் இப்படி மாட்டிவிட்டீர்கள் என்று சரத்குமாரை கடுமையான வார்த்தைகளால் திட்டி தீர்த்து இருக்கிறார். இதை எப்படி சமாளிப்பது? என்று யோசித்த சரத்குமாருக்கு, நாடார் சமூகத்தை சேர்ந்த சிலர், தமிழிசையை பார்க்க சொல்லி ஐடியா கொடுத்துள்ளனர். அதை ஏற்று, சரத்குமாரின் ஆதரவாளர் ஒருவர் தமிழிசை வீட்டின் கதவை தட்டி இருக்கிறார். இந்த விஷயத்தில் தமிழிசை தலையிட்டு பிரச்னையை சரி செய்திருக்கிறார். அந்த பெரும் சிக்கலில் இருந்து காப்பாற்றிய பிறகு தமிழிசை மீது பற்றும் பாசமும் கூடிப்போன சரத்குமார் – ராதிகா அதன் பிறகு தமிழிசையை அடிக்கடி போய் சந்தித்து பேசி வருவதை வழக்கமாக்கி கொண்டிருக்கின்றனர்.🌐