இந்தோனேசியாவில் மவுண்ட் அகுங் எரிமலை வெடிப்புக் காரணமாக பாலியிலுள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் பாலி தீவிலுள்ள எரிமலைகளில் ஒன்றான மவுண்ட் அகுங் வெடிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் லாவா குழம்புகள் வெளியே வருவதால் பாலித் தீவின் 2,500 மீட்டர்வரை புகை மண்டலத்தால் சூழப்பட்டுள்ளன.
இந்த எரிமலை வெடிப்புக் காரணமாக 75,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்ததாகவும், மவுண்ட் அகுங் பகுதியை சுற்றியுள்ள 10 கிலோமீட்டரில் வசிக்கும் மக்கள் தற்காலிகமாக வேறு இடத்துக்கு செல்ல இந்தோனேசிய அரசு அறிவுறுத்தியுள்ளது.
எரிமலை வெடிப்பு காரணமாக பாலியிலுள்ள விமான நிலையம் (இன்று) வெள்ளிக்கிழமை மூடப்பட்டுள்ளது.
நூற்றுக்கு மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சுற்றுலா பயணிகள் தீவுப் பகுதிகளிருந்து அங்கிருந்து விரைவாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
மவுண்ட் அகுங் எரிமலை கடந்த 1963-ம் ஆண்டு முதன்முதலில் வெடித்தது. சுமார் ஒருவருடம் தொடர்ந்து லாவா குழம்பை வெளியேற்றியது இதில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இந்தோனேசியாவில் 70க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.