2017-18-ம் நிதி ஆண்டில் அன்னிய நேரடி முதலீடு 6,196 கோடி டாலராக உயர்வு

கடந்த நிதி ஆண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட நேரடி அன்னிய முதலீடு (எப்டிஐ) 6,196 கோடி டாலர் என்று மத்திய தொழில் கொள்கை மற்றும் மேம்பாடுத் துறையின் செயலர் ரமேஷ் அபிஷேக் தெரிவித்துள்ளார்.

முந்தைய நிதி ஆண்டில் அன்னிய நேரடி முதலீடு 6,000 கோடி டாலராக இருந்தது.

கடந்த நான்கு ஆண்டுகளில் அன்னிய நேரடி முதலீடு அதிகரித்து வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர் ஒட்டுமொத்தமாக 22,275 கோடி டாலர் வந்துள்ளது என்றார்.

முந்தைய நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு 15,200 கோடி டாலர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும் ஐக்கிய நாடுகள் சபை அமைப்பான யுஎன்சிடிஏடி வெளியிட்டுள்ள அறிக்கையில் 2017-ம் ஆண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு 4 ஆயிரம் கோடி டாலர் என்று குறிப்பிட்டுள்ளது. முந்தைய ஆண்டில் (2016) இது 4,400 கோடி டாலராக இருந்ததாக யுஎன்சிடிஏடி தெரிவித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published.