27 கோடி பேரை வறுமையிலிருந்து மீட்ட இந்தியா’ – ஐநா ஆய்வு*

 
*🌏♨🤝‘27 கோடி பேரை வறுமையிலிருந்து மீட்ட இந்தியா’ – ஐநா ஆய்வு*

🌏♨🤝இந்தியா 10 ஆண்டுகளில் 27 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டிருப்பதாக ஐக்கிய நாடுகளின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

🌏♨🤝உலகின் பெரும் துயரமாக கருதப்படுவது வறுமை. இதுதொடர்பாக ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில், உலகில் உள்ள 101 நாடுகளில் 130 கோடி பேர் வறுமையின் பிடியில் சிக்கியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த வறுமை கணக்கீடு வெறும் பண வரவின் அடிப்படையில் மட்டும் கணக்கிடப்படவில்லை. இது குறைந்த பட்ச வருமானம், மக்கள் தொகை, உடல்நலக் குறைவு, செய்யும் வேலையின் தரம் மற்றும் வன்முறை, அச்சுறுத்தல் ஆகியவற்றைக் கொண்டு வகுக்கப்பட்டுள்ளது.

🌏♨🤝அந்த வகையில் 101 நாடுகளில் 10 நாடுகள் வேகமாக தங்கள் மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளன. அவை: பங்களாதேஷ், கம்போடியா, காங்கோ, எத்தியோப்பியா, ஹைதி, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பெரு மற்றும் வியட்நாம் ஆகியவை ஆகும். இதில் இந்தியா மட்டும் 2006 முதல் 2016ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட 10 ஆண்டுகளில் 27 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டுள்ளது. பங்களாதேஷ் 2004-14 ஆகிய 10 ஆண்டுகளில் 19 லட்சம் பேரை வறுமையில் இருந்து மீட்டிருக்கிறது.

🌏♨🤝இந்த 10 ஆண்டுகளில் ஊட்டத்து குறைபாடு கொண்ட இந்திய மக்களின் எண்ணிக்கை 44.3% லிருந்து 21.2% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. குழந்தை இறப்பு 4.5% லிருந்து 2.2% ஆகவும், சமையல் எரிவாயு இல்லாத மக்கள் எண்ணிக்கை 52.9% லிருந்து 26.2% ஆகவும் குறைந்துள்ளது. சுகாதாரமற்ற மக்கள் எண்ணிக்கை 50.4% லிருந்து 24.6% ஆகவும், குடிநீர் இல்லாத மக்கள் 16.6% லிருந்து 6.2% ஆகவும் குறைந்துள்ளனர். மேலும், மின்சாரம் இல்லாத மக்கள் 29.1% லிருந்து 8.6% ஆகவும், வீடுகள் இல்லாத மக்கள் 44.9% லிருந்து 23.6% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளனர்.*♨