3000 கோடி கட்டண பாக்கி வசூலிக்க பிஎஸ்என்எல் தீவிரம்

3000 கோடி கட்டண பாக்கி வசூலிக்க பிஎஸ்என்எல் தீவிரம்

புதுடெல்லி: பிஎஸ்என்எல் நிறுவனம் ஆபத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. அதன் ஊழியர்களுக்கு கடந்த மாத சம்பளத்தை 5 ம் தேதி தான் தாமதமாக பட்டுவாடா செய்துள்ளது. இது குறித்து நிர்வாக இயக்குனர் பர்வார் கூறியதாவது: பிஎஸ்என்எல். நிறுவனத்துக்கு பல கம்பெனிகளிடம் இருந்து 3 ஆயிரம் கோடி ரூபாய் வரை வர வேண்டியிருக்கிறது. இதை வசூலிக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு சொந்தமாக உள்ள இடங்களை வாடகை விட்ட வகையில் 200 கோடி ரூபாய் மாதந்தோறும் கிடைக்கிறது. 1000 கோடி ரூபாய் கிடைக்கும் வகையில் கூடுதல் இடங்களை வாடகைக்கு விட உள்ளோம். இவ்வாறு பர்வார் கூறினார்