ஆஸ்திரேலியன் கிரிக்கெட் விருதுகள் விழா மெல்பெர்னில் நடைபெற்றது. அதில் பேசிய ஸ்டார்க்கும் மார்ச் 15ல் யூஏஇயில் துவங்கும் பாகிஸ்தான் தொடருக்கு திரும்புவது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.
இந்திய தொடரிலிருந்து உலகக் கோப்பைக்கு தயாராவது துவங்கிவிடும் என்றார் ஸ்டார்க்.
காயம் காரணமாக இந்திய தொடரிலிருந்து விலகியுள்ளார் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க். இலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இந்திய தொடரில் இடம் பெற முடியாத ஸ்டார்க், பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இடம்பெறுவார் என்று கூறப்படுகிறது. இந்திய தொடர் முழுமைக்கும் ஸ்டார்க் இடம்பெற வாய்ப்பில்லை. ஆனால் மார்ச்சில் துவங்கும் பாகிஸ்தான் தொடரில் இடம்பெறக்கூடும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.