7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்ட படம் துக்ளக் தர்பார்.

7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்ட படம் துக்ளக் தர்பார். இதில் விஜய்சேதுபதியுடன் அதிதி ராவ் ஹைதாரி நாயகியாக நடிக்கிறார். ரா.பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். டெல்லி பிரசாத் தீனதயாளன் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்திற்கு வலு சேர்க்கும் விதமாக மேலும் இரண்டு இயக்குநர்கள் இணைந்துள்ளனர். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ இயக்குனர் பாலாஜி தரணிதரன் இவர் இப்படத்தின் வசனங்களை எழுதி இருக்கிறார்.

மற்றொருவர் 96 படம் மூலமாக இயக்குநராக பெரியளவில் கவனம் ஈர்த்த ஒளிப்பதிவாளர் பிரேம்குமார், இப்படத்திற்கு ஒளிப்பதிவு அமைக்க இருக்கிறார். கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசை அமைப்பாளராக இணைந்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு தொடங்கியது.🌐