Annapparavai news

Annapparavai news🔴

💥👉👉அனைத்து விதமான பயன்பாடுகள், சேவைகளுக்கு ஒரே விதமான அடையாள அட்டை : அமைச்சர் அமித்ஷா

டெல்லி: அனைத்து விதமான பயன்பாடுகள் மற்றும் சேவைகளுக்கு ஒரே விதமான அடையாள அட்டை அல்லது அடையாள ஆவணம் தேவை என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும் 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த தகவல்கள் மற்றும் அறிக்கை 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை விட மிகக் குறைந்த காலகட்டத்தில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

💥👉👉சிதம்பரம் நடராஜர் கோயில் பொற்கூரையை பாதுகாக்கவில்லை என்று கூறி தீட்சிதர்கள் மீது புகார் மனு

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் பொற்கூரையை பாதுகாக்கவில்லை என்று கூறி தீட்சிதர்கள் மீது மேலும் ஒருவர் புகார் மனு தாக்கல் செய்துள்ளார். கோயில் தீட்சிதர்கள் மீது மகரிஷி சிவபூஜை டிரஸ்ட் சார்பில் பன்னிர்செல்வம் டி.எஸ்.பி.யிடம் புகார் மனு தாக்கல் செய்துள்ளார்.

💥👉👉பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே பூங்கொடி என்ற பெண் தீக்குளித்த வழக்கில் 12 பேர் மீது வழக்குப்பதிவு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே பூங்கொடி என்ற பெண் தீக்குளித்த வழக்கில் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது வீட்டின் பாதையில் ஊராட்சி நிர்வாகம் கட்டிய சுவரை இடிக்கக் கோரி பூங்கொடி தீக்குளித்த வழக்கில் முன்னாள் ஊராட்சி தலைவர் மோகன், செயலர் கலையரசி உள்ளிட்ட 12 பேரிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

👉👉இளம்பெண் சுபஸ்ரீ மரண வழக்கு: மாநகராட்சி, காவல்துறை அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதா?…உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் ஏன் மாநகராட்சி மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது

💥👉👉வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மைய இயக்குனர் பேட்டி

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் மேலடுக்கு சுழற்சியானது, அடுத்த 3 நாட்களும் தமிழகத்தை நோக்கி நகர்கிறது. இதனால், தமிழகம் மற்றும் புதுவையின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும், வடதமிழக மாவட்டங்களின் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது.

இன்று ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. வரும் 24ம் தேதி வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், 25ம் தேதி கடலோர மாவட்டம் மற்றும் தென் மாவட்டங்களின் ஒருசில இடங்களிலும் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

வரும் 24, 25 ஆகிய தேதிகளில் குமரிக்கடல், தென்தமிழக கடலோர பகுதி மற்றும் மாலத்தீவு பகுதிகளில் வலிமையான சூறைக்காற்று வீச வாய்ப்பிருப்பதால், மீனவர்கள் அப்பகுதி கடலுக்கு இரண்டு நாட்கள் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

💥👉👉நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மாணவன் உதித் சூர்யா முன் ஜாமீன் மனு நாளை விசாரணை

மதுரை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட தேனி மருத்துவக் கல்லூரி மாணவன் உதித் சூர்யா முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்துள்ள மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நாளை விசாரணை நடத்தப்பட உள்ளது.

💥👉👉சிப்ஸாகர் அருகே டெமோவ் என்ற இடத்தில் பேருந்து டெம்போ வேணும் மோதியதில் 10 பேர் பலி

அசாம்: சிப்ஸாகர் அருகே டெமோவ் என்ற இடத்தில் பேருந்து டெம்போ வேணும் மோதியதில் 10 பேர் பலியாகினர். பேருந்து- டெம்போ மோதிய விபத்தில் படுகாயமடைந்த நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

💥👉👉ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

கும்பகோணம்: ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நெல்லை கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் சிவன் கோவிலில் திருடப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்டது.

💥👉👉மதுரையில் தொல்பொருள் ஆய்வகம் அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை: கனிமொழி எம்.பி. பேட்டி

டெல்லி: மதுரையில் தொல்பொருள் ஆய்வகம் அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துளோம் என கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். கீழடி அகழ்வாராய்ச்சிகள் தொடர வேண்டும் எனவும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என கனிமொழி எம்.பி. தெரிவித்தார். கீழடி விவகாரத்தை மத ரீதியிலாக கொண்டு போவது தவறானது என்று டெல்லியில் கனிமொழி எம்.பி. பேட்டியளித்துள்ளார்.

💥👉👉மதுரை வைகை ஆற்றில் எரிந்த நிலையில் பெண் சடலம்: போலீசார் விசாரணை

மதுரை: மதுரை செல்லூர் பாலம் கீழ் பகுதி வைகை ஆற்றில் எரிந்த நிலையில் பெண் உடல் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தை கேள்விப்பட்டு அக்கம் பக்கத்தினர் அப்பகுதியில் குவிந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி போக்குவரத்தை சரி செய்து உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

💥👉👉சட்டவிரோதமான அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்காவிட்டால் கேரள தலைமைச்செயலாளரே பொறுப்பு: உச்சநீதிமன்றம்

டெல்லி: சட்டவிரோதமான கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்காவிட்டால் கேரள தலைமைச்செயலாளரே பொறுப்பேற்க வேண்டும் என்று கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வருகின்ற வெள்ளிக்கிழமை விரிவான தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

💥👉👉மழைக்காலத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் : டி.டி.வி.தினகரன்

சென்னை: மழைக்காலத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். அனைத்துத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுக்களை மாவட்டம்தோறும் அமைத்திட வேண்டும் என்றும் கூறினார்.

💥👉👉கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகர் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.

டெல்லி: கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகர் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், சித்தராமய்யா மற்றும் ஜே.டி.எஸ். கட்சி தலைவர் விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

💥👉👉ஸ்ரீவைகுண்டம் அடுத்த செய்துங்கநல்லூரில் கல்லூரி அருகே மாணவர் வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்த செய்துங்கநல்லூரில் கல்லூரி அருகே மாணவர் அபிமணி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். சந்தையடியூரை சேர்ந்த மாணவர் அபிமணியை வெட்டிக் கொன்றது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

💥👉👉வெங்காயம் விலை உயர்வு தொடர்பாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜூவுடன் ஆலோசனை

சென்னை: வெங்காயம் விலை உயர்வு தொடர்பாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜூவுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். வெங்காயம் தட்டுப்பாட்டை எவ்வாறு சரி செய்வது? விலை ஏற்றத்தை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் இரண்டு அமைச்சர்களும் தங்கள் துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

💥👉👉ஹூஸ்டனில் நடந்த ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, தமிழ் மொழியில் ‘எல்லாம் சவுக்கியம்’ என உரையை தொடங்கினார். இதை கிண்டல் செய்து சிதம்பரம் பதிவிட்டுள்ளார்…..

புதுடெல்லி, ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செப்டம்பர் 5-ந்தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இன்று சிதம்பரத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திகார் சிறைசாலைக்கு சென்று சந்தித்தனர்.

இந்தநிலையில், தனது ட்விட்டரில் ப.சிதம்பரம் சார்பில் அவரது குடும்பத்தினர் கருத்து பதிவிடுவதாக குறிப்பிட்டு ட்விட் செய்துள்ளார்.

அதில், “நீண்ட நாட்களுக்கு பிறகு காங்., கட்சி வலிமையாகவும், துணிவுடனும் உள்ளது. நானும் வலிமையாகவும், துணிவுடனும் இருப்பேன். வேலைவாய்ப்பின்மை, வேலையிழப்பு, குறைந்த சம்பளம், வன்முறை தாக்குதல், காஷ்மீரில் ஊரடங்கு, எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டது தவிர நாட்டில் அனைத்தும் நன்றாக உள்ளது” என பதிவிட்டுள்ளார்.

ஹூஸ்டனில் நடந்த ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, தமிழ் மொழியில் ‘எல்லாம் சவுக்கியம்’ என உரையை தொடங்கினார் இதை கிண்டல் செய்து சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

💥👉👉பயனில்லாத மோடி நிகழ்ச்சி: பாக்., அமைச்சர் விஷமம்

இஸ்லாமாபாத் : இந்தியா பற்றியும், பிரதமர் மோடி பற்றியும் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையிலும், கிண்டல் செய்யும் வகையிலும் டுவிட்டரில் கருத்து பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் பாக்., அமைச்சர் பவத் ஹூசைன் சவுத்ரி.

அமெரிக்காவில் நேற்று மோடி பங்கேற்ற ஹவ்டி மோடி நிகழ்ச்சியை கிண்டல் செய்து கருத்து பதிவிட்டுள்ளார். ஹவ்டி மோடி நிகழ்ச்சி நடந்த மைதானத்தின் கடைசியில் காலியாக இருந்த சில இருக்கைகளின் போட்டோவை வெளியிட்ட பவத், ” கோடிக்கணக்கான பணம் செலவிட்டும் மோடியின் நிகழ்ச்சியால் எந்த பயனும் இல்லை. அமெரிக்கா, கனடா முழுவதிலும் இருந்து கூட அவர்களால் கூட்டம் சேர்க்க முடியவில்லை. பணத்தால் எதை வேண்டுமானாலும் வாங்கி விட முடியாது என்பதையே இது காட்டுகிறது” என பதிவிட்டுள்ளார்.

பாக்., அமைச்சரின் இந்த கிண்டல் டிவீட்டிற்கு இந்தியர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோடி வருவதற்கு முன்பு எடுக்கப்பட்ட போட்டோவை வெளியிட்ட பவத், அரங்கிற்குள் மோடி வந்த பிறகு எடுக்கப்பட்ட போட்டோவையும், மோடியை வாழ்த்தி அரங்கம் அதிரும் வகையில் எழுப்பப்பட்ட முழக்கத்தையும் ஏன் பதிவிடவில்லை என கேள்வி எழுப்பி உள்ளனர்.

💥👉👉சாதியவாதத்தை வன்கொடுமை என அங்கீகரித்து ஐநா சபை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அமெரிக்க சர்வதேச மாநாட்டில் திருமாவளவன் கூறியுள்ளார்.

💥👉👉ஜாமின் குறித்து சிதம்பரம் விளக்க மனு

புதுடில்லி: ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் ஜாமின் தர சிபிஐ எதிர்ப்பு தெரிவித்ததால் டில்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் விளக்க மனு அளித்தார். அதில், எனது குடும்பம் பல ஆண்டுகளாக பாரம்பரியமாக வசித்து வருகிறது. என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை. ஜாமின் கிடைத்தால் வெளிநாடு தப்பி விடுவேன் என சிபிஐ சொல்வது முற்றிலும் தவறானது. எம்.பி., பொறுப்புமிக்க குடிமகனாகிய நான், ஜாமின் கிடைத்தாலும் எங்கும் செல்ல மாட்டேன். இவ்வாறு சிதம்பரம் தரப்பில் விளக்க மனு அளிக்கப்பட்டது.

💥👉👉அதிபர் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய மோடி அமெரிக்கா செல்லவில்லை என பிரதமர் மோடி குறித்து காங்கிரஸ் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்…..

புதுடெல்லி, அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஹூஸ்டன் நகரில் இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த நலமா மோடி (ஹவுடி மோடி) நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு நிகழ்வாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா- அமெரிக்கா இடையேயான உறவு பற்றியும் பயங்கரவாதத்திற்கு எதிராக இணைந்து போரிடுவதன் முக்கியத்துவம் பற்றியும் பேசினார்.

மேலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பயங்கரவாதத்தை வேரருப்பதில் உறுதியாக இருப்பதாகவும் அடுத்த முறையும் அவரையே ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

மோடியின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த் சர்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “நீங்கள் எங்கள் பிரதமராக தான் அமெரிக்கா சென்றிருக்கிறீர்கள். அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய செல்லவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

தனது இன்னொரு டுவிட்டர் பதிவில், “நீண்ட காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் இந்திய வெளியுறவு கொள்கையின்படி இன்னொரு நாட்டின் தேர்தல் விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற கொள்கையை நீங்கள் மீறிவிட்டீர்கள். இது இந்தியாவின் கொள்கைகளை அவமதிப்பதாகும். நீங்கள் டிரம்புக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வது இரு நாடுகளின் இறையாண்மை மற்றும் ஜனநாயக விதிகளை மீறும் செயல்” என்று பதிவிட்டுள்ளார்.

💥👉👉நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட பல பிரபலங்கள் தங்கள் கட்சியிடம் விருப்பமனு அளித்து உள்ளனர்…..

சென்னை;- நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் மாதம் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தொகுதிகளில் போட்டியிட அ.தி.மு.க.வினர் சென்னையில் உள்ள தலைமை கழகத்தில் போட்டி போட்டு விருப்ப மனு வழங்கி வருகிறார்கள். அதுபோல், திமுக சார்பிலும், காங்கிரஸ் சார்பிலும் விருப்பமனு வாங்கப்பட்டு வருகிறது.

விக்கிரவாண்டி தொகுதிக்கு அதிமுக சார்பில் முன்னாள் எம்.பி. லட்சுமணன், விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர் வேலு, காணை ஒன்றிய செயலாளர் முத்தமிழ்ச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் பன்னீர், வக்கீல் தம்பித்துரை ஆகியோர் விருப்ப மனு கொடுத்தனர்.

அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் ராதாகிருஷ்ணன் போட்டியிடலாம் என்ற பேச்சும் பரவலாக அடிபடுகிறது.

பா.ம.க. தங்கள் கூட்டணியில் இருப்பதால் எப்படியும் இந்த தொகுதியை தங்கள் வசம் ஆக்கி விடலாம் என்று அ.தி.மு.க.வினர் வரிந்து கட்டி களத்தில் இறங்கி உள்ளனர்.

விக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட கள்ளக்குறிச்சி எம்.பி பொன்.கவுதம சிகாமணி விருப்பமனு அளித்து உள்ளார்.

நாங்குநேரி தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்பியும், அதிமுகவின் வழக்கறிஞர் அணிச் செயலாளருமான மனோஜ் பாண்டியன் விருப்ப மனுதாக்கல் செய்து உள்ளார்.

எம்பி தான் ஆக முடியவில்லை எம்எல்ஏவாவாது ஆகிவிடலாம் என்று மனோஜ் பாண்டியன் காய் நகர்த்த ஆரம்பித்துள்ளார். அதுவும் நாங்குநேரி தொகுதியை காங்கிரசுக்கு திமுக ஒதுக்கிவிட்டதால் இடைத்தேர்தலில் அதிமுக எளிதில் வெல்லும் என்பதால் எப்படியாவது வேட்பாளராகிவிட வேண்டும் என்பது மனோஜ் பாண்டியனின் எண்ணமாக உள்ளது.

இது போல் அதிமுக நட்சத்திரபேச்சாளரும், நடிகர் ஜஸ்டினின் மகளுமான பபிதா நாங்குநேரி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார்.

நாங்குநேரி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் போட்டியிட மூத்த தலைவர் குமரி ஆனந்தன் விருப்பமனு அளித்துள்ளார்.🔴