சர்ச்சைக்குள்ளான அஸ்வின்

ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.  கெயில், மாயங்க் அகர்வால் இணைந்து 56 ரன்கள் சேர்த்தனர். மாயங்க் 22 ரன்களில் வெளியேற, அடுத்து சர்ப்ராஸ் கான் களத்துக்கு வந்தார். அவர் 46 ரன்கள் சேர்த்தார். கெயில் 79 ரன்கள் சேர்த்து வெளியேறினார். பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 184 ரன்கள் சேர்த்தது.

அடுத்து ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய வந்தது. ரஹானே – பட்லர் இணைந்து 78 ரன்கள் சேர்த்தனர். பின் ரஹானே 27 ரன்களில் வெளியேறினார். அட்டகாசமாக ஆடி வந்த பட்லர் 69 ரன்கள் அடித்து இருந்த போது சர்ச்சைக்குரிய, முறையில் ஆட்டமிழந்தார். அஸ்வின் பந்து வீசிய போது, பேட்ஸ்மேனுக்கு எதிர்முனையில் இருந்த பட்லர், கிரீஸை விட்டு வெளியேறிய நேரத்தில், ரன் அவுட் செய்தார் அஸ்வின்.

இது பெரும் வாக்குவாதத்தை கிளப்பியது. அஸ்வின் வேண்டுமென்றே நின்று, பட்லர் கிரீஸை விட்டு வெளியேற விட்டுவிட்டு ரன் அவுட் செய்தார் என கூறப்பட்டது. எனினும், அம்பயர் முடிவால் பட்லர் வெளியேறினார். பஞ்சாப் அணிக்கு அதன் கேப்டன் அஸ்வின் சர்ச்சை ரன் அவுட் மூலம் பெரிய திருப்புமுனை ஏற்படுத்தி வெற்றி தேடிக் கொடுத்தார். பஞ்சாப் அணி 14 ரன்களில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் துவக்கி உள்ளது. .

Leave a comment

Your email address will not be published.