பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி🌐

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி🌐 மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 503 புள்ளிகள் குறைந்து 38,593 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு இந்திய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 148 புள்ளிகள் குறைந்து 11,440 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு. *#NSE #Sensex #Nifty #StockMarket#

இந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடுமையாக சரிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீடு 700 புள்ளிகள் வரை சரிந்தது.

இந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடுமையாக சரிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீடு 700 புள்ளிகள் வரை சரிந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், நேற்று வர்த்தகம் துவங்கியதில் இருந்தே சரிவை சந்தித்தது. வர்த்தக இடையில் 700 புள்ளிகள் வரை வீழ்ந்தது. @ காஷ்மீர் விவகாரம் எதிரொலி பங்குச்சந்தை, ரூபாய் மதிப்பு கடும் சரிவு🌐

தங்கம் விலை: 2 நாளில் ரூ.1000 க்கு மேல் உயர்வு! 

புதிய உச்சத்தில் தங்கம் விலை: 2 நாளில் ரூ.1000 க்கு மேல் உயர்வு! சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக அளவு முதலீடு செய்து வருவதால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்திய பொருளாதார நிலை குறித்து – அரவிந்த் சுப்ரமணியம்.

இந்திய பொருளாதார நிலை குறித்து – அரவிந்த் சுப்ரமணியம். இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி சதவீதம் சரியாக கணக்கிடப்படவில்லை.  உண்மையில் 2.5 சதவீதம் குறைவு. ஆனால், 7 சதவீதம் என்று தவறான தகவல் தரப்பட்டுள்ளது. உள்நாட்டு மொத்த உற்பத்தி திறன் வளர்ச்சியை கணக்கிடும் அளவீடுகள் பலவற்றை அரசு மாற்றியது. இப்படி மாற்றியதால் ஒட்டுமொத்த பொருளாதார அளவீடுகள் கணக்கிடும் முறையும் மாறியது. இதை வேறு யாரும் சொல்லவில்லை.  கடந்த சில  ஆண்டாக பாஜ அரசில் முக்கிய பங்காற்றியவர்.… Continue reading இந்திய பொருளாதார நிலை குறித்து – அரவிந்த் சுப்ரமணியம்.

மேக்ஸ் பூபா பங்குகளை விற்றது மேக்ஸ் இந்தியா

மேக்ஸ் பூபா ஹெல்த் இன்சூரன்ஸ் (மேக்ஸ் பூபா) நிறுவனத்தில் கொண்டுள்ள பங்குகள்முழுவதையும் விற்பனை செய்துள்ளதாக  மேக்ஸ் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மேக்ஸ் இந்தியா செபி அமைப்புக்கு செவ்வாய்க்கிழமை மேலும்தெரிவித்துள்ளதாவது: மேக்ஸ் பூபா நிறுவனத்தில் மேக்ஸ் இந்தியாவுக்கு 51 சதவீத பங்குகள்உள்ளது. இவை அனைத்தையும் ட்ரூ நார்த் பண்ட் நிறுவனத்துக்கு விற்பனை செய்வதெனமுடிவெடுக்கப்பட்டது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இயக்குநர்கள் குழுகூட்டத்தில் பங்குகள் முழுவதையும் விற்பனை செய்யும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதுஎன்று மேக்ஸ் இந்தியா செபியிடம் தெரிவித்துள்ளது.இந்த பங்கு விற்பனையின் முடிவில்நிறுவனத்துக்கு ரூ.510.51 கோடி கிடைக்கும் என மேக்ஸ் இந்தியா தெரிவித்துள்ளது.

கோட்டக் மஹிந்திரா வெளிநாட்டு பங்குமூலதனத்தைஉயர்த்திக் கொள்ள அனுமதி

கோட்டக் மஹிந்திரா வங்கியில் வெளிநாட்டு பங்கு மூலதனத்தின் அளவைஉயர்த்திக் கொள்ள அவ்வங்கியின் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து  பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி-யிடம் கோட்டக்மஹிந்திரா வங்கி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது: கோட்டக் மஹிந்திரா வங்கியில் அந்நிய நிதி நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களின்பங்கு மூலதனத்தின் அளவை உயர்த்திக் கொள்ள வங்கியின் இயக்குநர் குழுசெவ்வாய்க்கிழமை கூடி ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, வங்கியில் வெளிநாட்டு பங்கு மூலதனத்தின் அளவை தற்போதைய 43சதவீதத்திலிருந்து 45 சதவீதமாக அதிகரிக்க இயக்குநர் குழு அனுமதி அளித்துள்ளது.இது,உடனடியாகநடைமுறைப்படுத்தப்படும் என்று கோட்டக் மஹிந்திரா வங்கி செபி-யிடம்தெரிவித்துள்ளது. கோட்டக் மஹிந்திரா வங்கியின் நிறுவனரான உதய் கோட்டக்கின்பங்குமூலதனத்தை வரும் 2020-ஆம் அண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் 15 சதவீதமாகபடிப்படியாக குறைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அண்மையில்வலியுறுத்தியிருந்தது.கடந்த 2018 டிசம்பர் 31 நிலவரப்படி அந்த வங்கியில் உதய் கோட்டக்29.72 சதவீத பங்குகளை வைத்துள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.

பங்குச்சந்தையில் பணம் அள்ள பொறுமை அவசியம் – வாரன் பஃபெட் சொல்லும் ரகசியம்

மும்பை: பங்குச் சந்தையில் அதிக லாபம் சம்பாதிக்க வேண்டும் என்றால் பொறுமையும், சந்தை இறக்கத்தை சந்திக்கும்போது அதிக மன தைரியமும் இருந்தால் நாம் நினைத்ததை விட அதிக லாபம் சம்பாதிக்க முடியும் என்று வாரன் பஃபெட் ஆலோசனை கூறியுள்ளார் உலகின் மூன்றாவது கோடீஸ்வரரும், பங்குச் சந்தையில் முதலீடு செய்ய முன்வருபவர்களுக்கு கற்றுத்தரும் குருவாக விளங்குபவர் வாரன் பஃபெட். இவர் ஒரு பங்கிலோ அல்லது மியூச்சுவல் ஃபண்டிலோ முதலீடு செய்தால், இவரை பின்பற்றி முதலீட்டாளர்கள் அனைவரும் கண்ணை மூடிக்கொண்டு… Continue reading பங்குச்சந்தையில் பணம் அள்ள பொறுமை அவசியம் – வாரன் பஃபெட் சொல்லும் ரகசியம்

லாபம் அளிக்க கூடிய பங்குகளை அடையாளம் காண்பது எப்படி?

பல முதலீட்டாளர்களுக்கு எந்தப் பங்குகளை நீண்ட காலத்திற்கு வைத்திருக்க வேண்டும்? வைத்திருக்கக் கூடாது? என்று தெரியாமல் குழப்பத்தில் இருப்பார்கள். இது பங்கு சந்தையில் வர்த்தகர்கள் தினசரி சந்திக்கும் சவால்களாகும். நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வதற்கு முன்னர்க் குறிப்பிட்ட சாரம்சங்களோடு நீண்ட கால இலக்குகள் மற்றும் முழு அளவிலான சுழற்சியைப் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் சிறந்த ஆதாயத்துடன் வெற்றி பெற்ற பங்குகள் நீண்ட கால முதலீடு மூலமானது தான் என்பது பல தருணங்களில் நிரூபணமாகியுள்ளது. திட்டமிட்ட… Continue reading லாபம் அளிக்க கூடிய பங்குகளை அடையாளம் காண்பது எப்படி?