இன்றைய வர்த்தகச் செய்திகள்

*இன்றைய தினத்தின் முக்கிய 🔈தகவல்கள் செய்திகள் – மதன்: இன்றைய 🏅தங்க விலை : கிராம் ஒன்றிற்கு ரூ.3,022 இன்றைய 🥈 வெள்ளி விலை : கிராம் ஒன்றிற்கு ரூ.40.23 காசுகள். ⛽பெட்ரோல் விலை : லிட்டருக்கு ரூ.75.63 காசுகள். ⛽டீசல் விலை : லிட்டருக்கு ரூ. 70.36 காசுகள். இன்றைய 🌇வெப்பநிலை நிலவரம்👇 சென்னை :☀அதிகபட்சம் 40°C, குறைந்தபட்சம் 29°C திருச்சி : ☀ 41°C, 28°C மதுரை : ☀ 39°C, 26°C கோவை… Continue reading இன்றைய வர்த்தகச் செய்திகள்

அதிக வரி விதிக்கும் நாடு

அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிகம் வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து சாடி வருகிறார். ஒரு விருந்து நிகழ்ச்சியில் டிரம்ப் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவர்கள் (அமெரிக்க பொருட்களுக்கு) உலகிலேயே அதிகம் வரி விதிக்கிற நாடுகளில் ஒன்று. அவர்கள் நமக்கு 100 சதவீத வரி விதித்தார்கள். அவர்களது மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்களுக்கு நாம் வரி விதிப்பதில்லை. நாம் நமது ஹார்லே டேவிட்சன்… Continue reading அதிக வரி விதிக்கும் நாடு

பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 5 காசு அதிகரித்து லிட்டருக்கு ரூ.75.67 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து மாற்றமில்லாமல் லிட்டருக்கு ரூ.69.83 காசுகளாகவும் உள்ளது.

கடன் வட்டியை குறைத்தது ரிசர்வ் வங்கி

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி கால் சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.  மும்பையி‌ல் நடைபெற்ற ரிசர்வ் வ‌ங்கி நிதிக்கொள்கை ஆய்வுக் கூட்ட முடிவில் வட்டிக்குறைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கு ரிசர்வ் வங்கி வசூலிக்கும் வட்டி விகிதமான ரெப்போ, ‌6.25% ஆக உள்ள நிலையில் அது 6% ஆக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 2 புள்‌ளி 4 சதவிகிதமாக மேலும் குறைய வாய்ப்புள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ‌இதுதவிர,… Continue reading கடன் வட்டியை குறைத்தது ரிசர்வ் வங்கி

ஜாமீன் மனு 2வது முறையாக தள்ளுபடி!

வைர வியாபாரி நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை லண்டன் நீதிமன்றம் 2-வது முறையாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மும்பையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு லண்டன் தப்பிச் சென்ற நீரவ் மோடி கடந்த 19-ந் தேதி கைது செய்யப்பட்டார். லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது காவல் நேற்று முடிவடைந்த நிலையில், வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீரவ் மோடி சார்பில்… Continue reading ஜாமீன் மனு 2வது முறையாக தள்ளுபடி!

இனி Credit Card தேவையில்லை….

ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து பொருட்களும் பல்வேறு தொழில்நுட்பங்களுடனும் சிறப்பு வசதிகளுடனும் வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்த வகையில், Apple card என்ற Credit Card போன்ற செயலியை அறிமுகப்படுத்தவிருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.இந்த நவீன காலகட்டத்தில் பணம் கொடுத்து ஒரு பொருளை வாங்குவதற்கு பதில், ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை செய்து பொருட்களை எளிதாக மக்கள் வாங்கிவிடுகின்றனர். அதற்கு மிகவும் உதவுவது Credit Card. ஆனால், Credit card-ன் Password அல்லது CVV எண், யாருக்காவது தெரிந்தால் அதனை தவறாக பயன்படுத்திவிட முடியும். அதுபோன்ற பிரச்சனைகளில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதுதான் Apple Card செயலி. இதை பயன்படுத்தினால்,… Continue reading இனி Credit Card தேவையில்லை….

தமிழகத்தில் ஏப்ரல் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்வு!

சுங்கக்கட்டணம் 3 முதல் 5 சதவீதம் வரை உயர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் உள்ள சூரப்பட்டு, வானகரம், பரனூர், திண்டிவனம் உள்ளிட்ட சுங்கச்சாவடிகள் இந்த பட்டியலில் இடம்பெறுகின்றன. இதன் மூலம் கார்களுக்கான சுங்கக்கட்டணம், 55 ரூபாயில் இருந்து 60 ரூபாயாக உயர்கிறது. இலகு ரக சரக்கு வாகனங்களுக்கான கட்டணம் 90ல் இருந்து 95 ரூபாயாக அதிகரிக்கிறது. மேலும் லாரி மற்றும் பேருந்துகளுக்கான கட்டணம் 190 ரூபாயில் இருந்து 195 ரூபாயாக உயருகிறது.

டாடா ஹாரியர் தான் சிறந்தது.

டாடா ஹாரியரை காட்டிலும் ஹூண்டாய் கிரெட்டா தலை சிறந்து விளங்குகிறது. இந்தியாவின் டாடா நிறுவனம் ஆல் நியூ ஹாரியர் எஸ்யூவி (Tata Harrier SUV) காரை கடந்த ஜனவரி மாத கடைசியில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. தற்போது மார்க்கெட்டில் மிகவும் பிரபலமான மாடல்களில் ஒன்றாக டாடா ஹாரியர் உருவெடுத்துள்ளது. டாடா ஹாரியர் எஸ்யூவி காரின் ஒரு சில வேரியண்ட்களுக்கான காத்திருப்பு காலம் தற்போது 6 மாதங்கள் வரை உள்ளது. இந்திய நிறுவனங்களில் டாடாவின் கார்கள் விரைவாக செயலாற்றக்கூடியவை.… Continue reading டாடா ஹாரியர் தான் சிறந்தது.

ரூ.8 ஆயிரம் கோடி கடன்: ஜெட் ஏர்வேஸ்

ரூ.8 ஆயிரம் கோடி கடன் ஏற்பட்டுள்ள நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் திங்கள்கிழமை விலகினார். முன்னதாக, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிர்வாகக்குழுக்கூட்டம் மும்பையில் நடைபெற்றது. அப்போது கடன் பிரச்னையை தீர்க்க மேற்கொண்டு இடைக்கால நிதி பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் அக்குழுமத்தில் இருந்து விலகுவதாக திங்கள்கிழமை அறிவித்துள்ளனர். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு பெரும்பான்மையான கடன் தொகை வழங்கியுள்ள பாரத ஸ்டேட் வங்கி,… Continue reading ரூ.8 ஆயிரம் கோடி கடன்: ஜெட் ஏர்வேஸ்

பதறும் ஓலா நிர்வாகம்..!

சமீபத்தில் தான் ஓலா தன் பைக் டாக்ஸி சேவைகளை பெங்களூரூவில் தொடங்கி முன்னோட்டம் பார்த்தது. ஆனால் அதற்கு முறையாக அரசாங்கத்திடமோ அல்லது போக்குவரத்து துறைகளிடமோ எந்த ஒரு உரிமத்தையும் வாங்க வில்லை என கர்நாடக போக்குவரத்து 2019 மார்ச் 18-ம் தேதியே நோட்டீஸ் அனுப்பி இருக்கிறதாம். ஓலா நிறுவனத்துக்கு ஜூன் 2016-ம் ஆண்டில் இருந்து ஜூன் 2021-ம் ஆண்டு வரை டாக்ஸி (நான்கு சக்கர மோட்டார் வாகனம்) மட்டுமே வைத்து கேப் சர்வீஸ் நடத்த உரிமம் வழங்கி… Continue reading பதறும் ஓலா நிர்வாகம்..!

இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 6 கார்கள்

பிப்ரவரி 2019-க்கான கார்கள் விற்பனை விவரம் வெளியாகி இருக்கிறது. இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சமூகம் இந்த கணக்கை வெளியிட்டிருக்கிறது. இந்த கணக்குப் படி மாருதி சுஸிகியின் மாருதி ஆல்டோ தான் பிப்ரவரி 2019-ம் மாதம் அதிகம் விற்பனையான கார். பிப்ரவரியில் மட்டும் 24,751 மாருதி ஆல்டொக்கள் விற்பனையாகி இருக்கிறதாம். ஆல்டோவைத் தொடர்ந்து மாருதி சுஸிகியின் ஸ்விஃப்ட் கார்கள் 18,224 எண்ணிக்கையில் கடந்த பிப்ரவரி 2019-ல் மட்டும் விற்பனை ஆகி இரண்டாம் இடத்தைப் பிடித்து இருக்கிறது. 2018 பிப்ரவரியில்… Continue reading இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 6 கார்கள்

மஹிந்திராவின் மின்சார சூப்பர் கார்!

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்று வரும் மோட்டார்கண்காட்சியில் மஹிந்திரா குழுமத்தைச் சேர்ந்த பினின்ஃபரினா நிறுவனம் மின்சாரத்தில்இயங்கும் சூப்பர் காரை அறிமுகம் செய்தது.   ஃபார்முலா1 பந்தயக் காரைவிட அதிவேகமாக செல்ல கூடியது பட்டிஸ்டா. மணிக்கு 100 கி.மீ.வேகத்தை இரண்டே விநாடிகளில் அடையும் திறன் கொண்டது. இதுகுறித்து பினின்ஃபரினா தலைமை செயல் அதிகாரி மிஷெல் பெர்ஷ்கே கூறியது “உலகின்மிகச் சிறந்த கார்களில் ஒன்றாக பட்டிஸ்டா விளங்கும். வாகனத் துறை வரலாற்றில் தனிமுத்திரையை இந்தக் கார் பதிக்கும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலானபசுமைத் தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 150 கார்கள் மட்டுமேதயாரிக்கப்படும். இவை அனைத்தும் இத்தாலியில் உள்ள ஆலையில் உருவாக்கப்படும் என்றார். இத்தாலியின் பிரபல பினின்ஃபரினா நிறுவனத்தை கடந்த 2015ஆம் ஆண்டு மஹிந்திராகையகப்படுத்தியது.