வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பிச்சு வாங்குதுங்கோ….🌧⛈ இன்னும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னை கோயம்பேடு அருகே அனைத்து சாலைகளிலும் வாகன நெரிசல்: நெடுஞ்சாலைத்துறை மீது புகார்

சென்னை கோயம்பேடு அருகே அனைத்து சாலைகளிலும் வாகன நெரிசல்: நெடுஞ்சாலைத்துறை மீது புகார் சென்னை: சென்னை கோயம்பேடு அருகே அனைத்து சாலைகளிலும் வாகன நெரிசல் காரணமாக பொதுமக்கள் அவதி பட்டுவருகின்றனர். சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால் நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் அளித்துள்ளனர். கோயம்பேடு முதல் மதுரவாயல் சாலையை நெடுஞ்சாலைத்துறை சீரமைக்கவில்லை என்று குற்றசாட்டு எழுந்துள்ளது. மதுரவாயல்-துறைமுகம் உயர்மட்ட சாலைப்பணி நிறுத்தப்பட்டதால் 8 ஆண்டுகளாக அவதிப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.🌐

ஆக.,23: பெட்ரோல் ரூ.74.62; டீசல் ரூ.68.79

ஆக.,23: பெட்ரோல் ரூ.74.62; டீசல் ரூ.68.79 விலை விபரம் சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.74.62 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.68.79 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

தமிழகத்தில், வாக்காளர் சரிபார்ப்பு பணி, அடுத்த மாதம் நடக்க உள்ளது.

தமிழகத்தில், வாக்காளர் சரிபார்ப்பு பணி, அடுத்த மாதம் நடக்க உள்ளது. சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, செப்டம்பர் 1 முதல், செப்டம்பர் 30 வரை நடக்க உள்ளது. அப்போது, வாக்காளர்களை சரி பார்ப்பதற்காக, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வீடு வீடாக வருவர். அவர்களிடம், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பது, தங்களுடைய பெயர் என்பதை உறுதிப்படுத்த, வாக்காளர்கள் உரிய ஆவணத்தை அளிக்க வேண்டும். பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், ஆதார், ரேஷன் கார்டு, பான் கார்டு, பிறப்பு சான்றிதழ், பள்ளி… Continue reading தமிழகத்தில், வாக்காளர் சரிபார்ப்பு பணி, அடுத்த மாதம் நடக்க உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. @ 6 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடந்து வரும் அற்புதம்… மனதை குளிர்விக்கும் மழை..! @ ‘’தொடர்ந்து இரண்டாவது நாளாக சென்னை நகரில் பரவலான மழை பெய்து வருகிறது. மிகவும் அரிதான நிகழ்வு இது. தற்போது நிலை கொண்டிருக்கும் மேகக் கூட்டங்கள் தொடர்ந்து அதே இடத்தில் இருக்கும். இதனால் தொடர்ந்து மழை பெய்யும்.@ – பிரபல வானிலை கணிப்பாளர்… Continue reading தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

கோவை, நீலகிரி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கோவை, நீலகிரி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் கனமழையால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து சாலைகளில் பாய்வதால் வாகனப் போக்குவரத்து பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மலை சார்ந்த பகுதிகள் ரம்மியமாக காட்சி தருகின்றன. கனமழை காரணமாக இரும்பு பாலம் என்ற இடத்தில் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மூன்று தாலுகாக்களில் உள்ள அனைத்து பள்ளி… Continue reading கோவை, நீலகிரி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

முக்கிய அறிவிப்பு.ரேஷன் கார்டு சரிபார்க்க வீடுகளுக்கு அரசு அதிகாரிகள் வருவார்கள். அந்த நேரம் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.

முக்கிய அறிவிப்பு.ரேஷன் கார்டு சரிபார்க்க வீடுகளுக்கு அரசு அதிகாரிகள் வருவார்கள். அந்த நேரம் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.

இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது.

இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. @ விடுவாங்களா?

ஒரு லட்சம் வரை அபராதம்’ – புதிய மோட்டார் சட்டத்திருத்தம் உஷார்

ஒரு லட்சம் வரை அபராதம்’ – புதிய மோட்டார் சட்டத்திருத்தம் உஷார் ♨மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியுள்ள நிலையில் அடுத்து மாநிலங்களவையில் இன்று அது நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திருத்தப்படி, வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறும்போது அதற்கான தண்டனையாக இனி ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம், 3 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட உள்ளது. விரைவில் அமலாக உள்ள மோட்டார் வாகன போக்குவரத்து சட்டத்தில் என்ன அம்சங்கள் இட‌ம் பெற்றுள்ளன? பார்ப்போம். ♨… Continue reading ஒரு லட்சம் வரை அபராதம்’ – புதிய மோட்டார் சட்டத்திருத்தம் உஷார்

மழை பெய்யவில்லை… உண்மை தான் ! ஆனால் அதை குறையாக சொல்ல நமக்கு அருகதை இருக்கிறதா ?

மழை பெய்யவில்லை… உண்மை தான் ! அரசாங்கம் நீர்நிலைகளை பாதுக்காக்க வில்லை… உண்மை தான்… எந்த அரசாங்கமும் அதை உருப்படியாக செய்யவில்லை…. ஆனால் அதை குறையாக சொல்ல நமக்கு அருகதை இருக்கிறதா ? நீர் நிலைகளை நாம் எப்படி கையாள்கிறோம் ??

இனி சமைக்க, சாப்பிட, குடிக்க நீருக்கு பதிலாக டீசலை பயன்படுத்துவோமா?

10,000 ஏக்கர் நிலத்தை அழித்து, 7ஆறு 8மலைகளை சிதைத்து, 20,000 மரங்களை வெட்டி கொண்டு வரப்படுகிற 8வழி சாலை திட்டத்தால் வருடத்துக்கு ₹700 கோடி டீசல் சேமிப்பு ஏற்படும் என்கிறார் எடப்பாடி. # இனி சமைக்க, சாப்பிட, குடிக்க நீருக்கு பதிலாக டீசலை பயன்படுத்துவோமா? எத்தனையோ ஆண்டுகள் காலம் டீசலையும் பெட்ரோலையும் நம்பியா வாழ்ந்தாா்கள்.. மக்கள்