பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதிக்கு முன்னேறினார் நடால் பெண்கள் பிரிவில் ஹாலெப் அசத்தல்

பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபெல் நடால், டெல்போட்ரோ அரைஇறுதிக்கு முன்னேறினர். ஜூன் 08, 2018, 04:00 AM பாரீஸ், பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபெல் நடால், டெல்போட்ரோ அரைஇறுதிக்கு முன்னேறினர். பெண்கள் பிரிவில் ருமேனியா வீராங்கனை ஹாலெப், முன்னாள் சாம்பியன் முகுருஜாவை தோற்கடித்து இறுதிசுற்றை எட்டினார். நடால் வெற்றி‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் முந்தைய நாள் மழையால் பாதியில்… Continue reading பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதிக்கு முன்னேறினார் நடால் பெண்கள் பிரிவில் ஹாலெப் அசத்தல்

நார்வே செஸ் 2018: விஸ்வநாதன் ஆனந்த் தோல்வி…!

நார்வே செஸ் சாம்பியன்ஷிப்-ன் 8வது போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வியடைந்தார். ஜூன் 08, 2018, 07:15 AM ஸ்டாவாங்கர், நார்வேவில் ஆறாவது நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. ரவுண்டு ராபின் முறையில் நடக்கும் இத்தொடரில் முன்னணி வீரர்களான ‘டாப்- 10’ வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் எட்டாவது போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், அமெரிக்க வீரர் ஃபெபியானோ கருவானாவை எதிர்கொண்டார்.  இதில் ஆனந்த் வெள்ளை நிற காய்களுடனும்,  ஃபெபியானோ கருப்பு நிற காய்களுடனும் மோதினர். கடுமையான… Continue reading நார்வே செஸ் 2018: விஸ்வநாதன் ஆனந்த் தோல்வி…!

கோஹ்லிக்கு வந்த சோதனை…

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி உலகெங்கும் பெரும் புகழ்பெற்றவர். அவருக்கு ரசிகர்கள் அதிகம். ஆனால், அதே ரசிகர்களால் அவருக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான, 29 வயதாகும் விராட் கோஹ்லிக்கு சமீபத்தில் டெல்லியில் உள்ள மேடம் துஸாட்ஸ் மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்டது. சச்சின் டெண்டுல்கர், கபில் தேவுக்குப் பிறகு, மெழுகு சிலை வைக்கப்படும் பிரபல கிரிக்கெட் வீரராக கோஹ்லி உள்ளார். ஆறு மாதங்களாக பல்வேறு கலைஞர்கள்… Continue reading கோஹ்லிக்கு வந்த சோதனை…

எதையும் சாத்தியமாக்கும் ஜெர்மனி…!

அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளின் பட்டியலில் 2-வது இடத்தில் இருப்பது ஜெர்மனிதான். அந்த அணி 1954, 1974, 1990, 2014 ஆகிய ஆண்டுகளில் மகுடம் சூடியது. 13 அரை இறுதிகள், 8 இறுதிப் போட்டிகளை சந்தித்துள்ள ஜெர்மனி உலகக் கால்பந்தில் ஆதிக்கம் செலுத்தும் முதன்மையான அணிகளுள் ஒன்றாக திகழ்கிறது. ரஷ்ய உலகக் கோப்பை தொடரை நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் சந்திக்கிறது ஜெர்மனி. தகுதி சுற்றில் 10 ஆட்டங்களிலும் அபார வெற்றிகளை அந்த அணி குவித்தது.… Continue reading எதையும் சாத்தியமாக்கும் ஜெர்மனி…!

உருகுவே அணியை கரையேற்றுவார்களா லூயிஸ் சுவாரெஸ், எடிசன் கவானி

உருகுவே அணி உலகக் கோப்பை தொடருக்கு 13-வது முறையாக தகுதி பெற்றுள்ளது. 1930-ல் உலகக் கோப்பையை வென்ற முதல் அணி என்ற சாதனையை படைத்த உருகுவே, 1950-ல் 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. அதன் பின்னர் கோப்பையை வெல்ல 68 ஆண்டுகளாக போராடி வருகிறது. எனிம் அந்த அணி கடந்த 10 ஆண்டுகளில் பயிற்சியாளர் ஆஸ்கார் தபரேஸ் வழிகாட்டுதலில் ஒரு நிலையான மற்றும் வளமான காலக்கட்டத்துக்குள் நுழைந்துள்ளது. ரஷ்ய உலகக் கோப்பையில் உருகுவே அணி எளிதான… Continue reading உருகுவே அணியை கரையேற்றுவார்களா லூயிஸ் சுவாரெஸ், எடிசன் கவானி

4 நாடுகள் கால்பந்து: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி…

4 நாடுகளுக்கிடையேயான கால்பந்து போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஜூன் 05, 2018, 05:30 AM மும்பை, 4 அணிகள் பங்கேற்றுள்ள கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த தனது 2-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, கென்யாவை சந்தித்தது. மழைக்கு மத்தியில் நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் கென்யாவை தோற்கடித்து 2-வது வெற்றியை ருசித்ததுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. 100-வது… Continue reading 4 நாடுகள் கால்பந்து: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி…

சென்னை: மாநில ஜூனியர் நீச்சல் போட்டியில் டால்பின் அணி சாம்பியன்

சென்னையில் நடைபெற்ற மாநில ஜூனியர் நீச்சல் போட்டியில் எஸ்டிஏடி டால்பின் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஜூன் 05, 2018, 08:29 AM சென்னை, தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கத்தின் சார்பில், மாநில அளவிலான 35வது சப்ஜூனியர் மற்றும் 45வது ஜூனியர் நீச்சல் போட்டிகள் வேளச்சேரியில் உள்ள சர்வதேச நீச்சல்குள அரங்கில் நடைபெற்றன. ஜூன் 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் சிறுவர் பிரிவில் டர்டில்ஸ் அணி 281… Continue reading சென்னை: மாநில ஜூனியர் நீச்சல் போட்டியில் டால்பின் அணி சாம்பியன்

கால் இறுதியில் நடால், ஹாலப்…

பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் ரபேல் நடால், சிமோனா ஹாலப் ஆகியோர் கால் இறுதிக்கு முன்னேறினார்கள். பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் 6-3, 6-2, 7-6 (7-4) என்ற நேர் செட்டில் ஜெர்மனியின் மாக்சிமிலியனை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். மகளிர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலப் 6-2, 6-1 என்ற நேர் செட்டில் பெல்ஜியத்தின்… Continue reading கால் இறுதியில் நடால், ஹாலப்…

இண்டர்காண்டினெண்டல் கோப்பை: இந்திய அணி வெற்றி – சுனில் செத்ரிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து

இண்டர்காண்டினெண்டல் கோப்பை கால்பந்து போட்டியில் கென்யா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஜூன் 05, 2018, 07:34 AM மும்பை, இந்தியா, கென்யா, சீன தைபே, நியூசிலாந்து ஆகிய நான்கு நாடுகளின் கால்பந்து அணிகள் பங்குபெறும் இண்டர்காண்டினெண்டல் கோப்பை மும்பையில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் இந்தியா – கென்யா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி… Continue reading இண்டர்காண்டினெண்டல் கோப்பை: இந்திய அணி வெற்றி – சுனில் செத்ரிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து