ஏப்.1-இல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-45!

பிஎஸ்எல்விசி- 45 ராக்கெட், 28 செயற்கைக்கோள்களுடன் வரும் திங்கள்கிழமை காலை விண்ணில் செலுத்தப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி மையத்தில், இதற்கான இறுதிக்கட்ட பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட எமிசாட் செயற்கைக்கோளும், 4 வெளிநாடுகளை சேர்ந்த 28 செயற்கைக்கோள்களும் பிஎஸ்எல்வி சி-45 ராக்கெட் மூலம் வரும் திங்கட்கிழமை விண்ணில் ஏவப்படவுள்ளது.  இதில் அமெரிக்காவின் 24 செயற்கைக் கோள்களும், லிதுவேனியா,ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளின் 4 செயற்கைக்கோளும், பிஎஸ்எல்வி –… Continue reading ஏப்.1-இல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-45!

இந்தியாவின் முதல் ரேஸிங் சிமுலேட்டர்

பெங்களூரை சேர்ந்த இன்ரேஸிங் நிறுவனம், இந்தியாவின் முதல் ரேஸிங் சிமுலேட்டரை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் (Motorsports), நாலு கால் பாய்ச்சலில் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இங்கு பல்வேறு ரேஸிங் அகாடமிகள் உள்ளன. மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஆர்வலர்களுக்கு பயிற்சி அளிப்பதுடன் அவை நின்று விடுவதில்லை. அவர்கள் களத்தில் தங்கள் திறமையை வெளிக்காட்டவும் வாய்ப்பு அளிக்கின்றன. ரேஸிங் டிராக்குகளை நன்றாக புரிந்து கொள்ள டிரைவர்கள் அல்லது ரைடர்களை ரேஸிங் சிமுலேட்டர்கள் அனுமதிக்கின்றன. அத்துடன் கார் அல்லது மோட்டார் சைக்கிள்களின்… Continue reading இந்தியாவின் முதல் ரேஸிங் சிமுலேட்டர்

விவோவின் புதிய அத்தியாயம்… மடங்கும் போன்கள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்!

சில நாட்களுக்கு முன்னர் விவோ நிறுவனத்தின் துணை ப்ரண்டன் ஐக்யூ (IQOO) அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்த புதிய பிராண்டின் கீழே எதிர்காலத்தில் அதிநவீன தயாரிப்புகள் பற்றிய  சுவாரசியமான தகவல்கள் வெளியாகிவுள்ளது. மேலும் தற்போதைய தகவல்கள் படி ‘மடங்கும் போன்’ ஒன்று இந்த பிராண்டின் கீழ் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இப்படி வெளியாகும் இந்த ஐக்யூ (IQOO) மடங்கும் போன்களின் புகைப்படங்கள் வெய்போ தளத்தில் கசிந்துள்ளது.மேலும் புகைப்படத்திலிருந்தே அது மடங்கும் மாடல் போன்தான் என்று எளிதாக அறியக்கூடியவகையில் காண்பிக்கப்படுகிறது.

ஹானர் மொபைல் அதிரடி விலை குறைப்பு: குறைந்த விலையில் ஹானர் மொபைல் வாங்க இப்போது நல்ல ஒரு வாய்ப்பு!

அமேசானில் நடைபெற்று கொண்டிருக்கும் ’ஹானர் டேஸ்’ சேல் நேற்று தொடங்கி வருகின்ற 18 ஆம் தேதிவரை நடைபெறும் என அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த விற்பனையில் Honor 8X, Honor Play, Honor 8C மற்றும் Honor 7C போன்கள் குறைந்த விலையில் கிடைக்கும். Honor 8X (மிட்நைட் பிளாக் 4 ஜிபி ரேம் + 64 ஜிபிரோம்) ரூ.13,999: ரூ.1000 எக்ஸ்சேஞ் ஆஃபர், Honor 8X (நேவி 4ஜிபி ரேம்+64 ஜிபி ரோம்) ரூ.13,999:… Continue reading ஹானர் மொபைல் அதிரடி விலை குறைப்பு: குறைந்த விலையில் ஹானர் மொபைல் வாங்க இப்போது நல்ல ஒரு வாய்ப்பு!

மிஸ் யூ! என்று மற்ற தொலைத்தொடர்பு நிறுவங்களை வெறுப்பேற்றிய ஜியோ

காதலர் தினத்தை முன்னிட்டு ட்விட்டரில் பதிவிட்ட ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது போட்டியாளர்களை மறைமுகமாக வம்புக்கு இழுத்துள்ளது செய்துள்ளது. ஜியோ 4G சிம் கார்டு என்பதால் அது அறிமுகமான காலத்தில்  பெரும்பானவர்கள் தங்கள் தொலைபேசியில் சிம் 1 இடத்தில் ஜியோ சிம் கார்டை பயன்படுத்தினர். இதனால், ஜியோ தவிர மற்ற நிறுவனங்களின் சிம் கார்டுகளை 2வது சிம் கார்டுக்கு உரிய இடத்திலேயே வாடிக்கையாளர்கள் பயன்படுத்தினார்கள். இதை வைத்துத்தான் ஜியோ நிறுவனம் தங்களை போட்டியாளர்களை நோக்கி, சிம் 2வில்… Continue reading மிஸ் யூ! என்று மற்ற தொலைத்தொடர்பு நிறுவங்களை வெறுப்பேற்றிய ஜியோ

MS 13 கும்பலைப் பிடிக்க பேஸ்புக் உதவியை நாடும் அமெரிக்கா

அமெரிக்க அரசு எம்.எஸ். 13 என்ற முக்கிய கிரிமினல் கும்பலைப் பிடிக்க பேஸ்புக்நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளது. சர்வதேச அளவில் அறியப்பட்ட எம்.எஸ். 13 கும்பல் (MS 13 gang) அமெரிக்காவில் பல்வேறு கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையது. இந்த கும்பலை அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிருங்கங்கள் என்று விமர்சித்தார். இந்த கும்பலைச் சேர்ந்தவர்களைப் பிடிக்க அந்நாட்டு அரசு பேஸ்புக் நிறுவனத்தின் உதவியைக் கேட்டிருக்கிறது. குற்றவாளிகள் தங்களுக்குள் பேஸ்புக் மெசெஞ்சர் அப்ளிகேஷன் மூலம் பேசிக்கொள்கிறார்கள் என்றும் அவர்கள் பேசுவதை துப்பு துலக்க அவர்களது… Continue reading MS 13 கும்பலைப் பிடிக்க பேஸ்புக் உதவியை நாடும் அமெரிக்கா

எலிக்கு இளமை திரும்ப வைத்த இந்தியர்!

இந்திய வம்சாவளி அமெரிக்கர் ஒருவர் வயதான எலியின் தோல் சுருக்கங்கள் மற்றும் முடி உதிர்வை சரிசெய்து இளமைக்கு திரும்ப வைக்கும் கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளார். அமெரிக்காவில் உள்ள அலபாமா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார் கேசவ் சிங். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் வயதான எலியின் உடலில் உள்ள தோல் சுருக்கங்கள் மற்றும் முடி உதிர்வை சரிசெய்து இளமை தோற்றத்தை உருவாக்கும் வழியை தனது குழுவினருடன் இணைந்து கண்டுபிடித்துள்ளார். மிட்டோகோன்ரியல் டிஎன்ஏ ஜீன்களில் மாற்றம் செய்வதால் தோல் சுருக்கத்தை சரிசெய்யவும்… Continue reading எலிக்கு இளமை திரும்ப வைத்த இந்தியர்!

தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை கூகுள் மேப்ஸ் மூலம் டிராக் செய்வது எப்படி?

ஸ்மார்ட்போன் எடுக்க பாக்கெட்டில் கையை நுழைத்த பின், ஸ்மார்ட்போன் அங்கு இல்லாத நிலையை உணர்ந்திருக்கிறீர்களா? இதுபோன்ற அனுபவம் நினைக்கவே கடினமானதாக இருக்கும். ஒருவேளை போன் தொலைந்து போயிருந்தால்? அல்லது அதை எங்காவது தவறுதலாக வைத்திருந்தால்? அதில் இருக்கும் டேட்டா, கான்டாக்ட் மற்றும் புகைப்படங்களின் நிலை என்னவாகும்? உங்களின் மூளை கடைசியாக போனினை எங்கே வைத்தோம் என்ற எண்ணத்தை நினைப்படுத்தும். இனி உங்களது போனை நீங்கள் வைத்த இடம் நினைவுக்கு வரலாம் அல்லது அதனை நல்ல உள்ளம் கொண்டவர்… Continue reading தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை கூகுள் மேப்ஸ் மூலம் டிராக் செய்வது எப்படி?

தமிழ் உட்பட 22 மொழிகளில் இணையதள முகவரிகள்

இணையதளங்களுக்கான முகவரிகளை ஆங்கிலம் தவிர 22 இந்திய மொழிகளில் அறிமுகம் செய்யபட உள்ளன. சர்வதேச பெயர் மற்றும் எண்கள் ஒதுக்கீட்டு அமைப்பு (ICANN) இணையதள முகவரிகளை (Internet Domain Name System) உருவாக்குவதை கட்டுப்படுத்தி வருகிறது. இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் விரைவில் தமிழ் உட்பட 22 இந்திய மொழிகளில் இணையதள முகவரிகளை உருவாக்கும் வசதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “தற்போது தமிழ், வங்காளம், தேவநாகரி, குஜராத்தி, குர்முகி, கன்னடம், மலையாளம், ஒரியா, தெலுங்கு ஆகிய… Continue reading தமிழ் உட்பட 22 மொழிகளில் இணையதள முகவரிகள்