சாக்லேட் பாய் ரகசியம்

ஹரீஸ் கல்யாண் மாதிரி தாடி வளர்த்து பொண்ணுங்களோட ஆசை நாயகனாகணுமா? இத ட்ரை பண்ணுங்க…..!!!!!!!

சாக்கலேட்பாய் லுக் தான் இளம்பெண்களுக்கு பிடிக்கும் என்ற காலம் மாறி, தாடி மீசை பெரிதா வளர்க்கும் ஆண்களே கவர்ச்சியானவர்கள் என்று யுவதிகள் நினைக்கும் காலத்திற்கு வந்தாச்சு. அதுவும் அர்ஜுன் ரெட்டி விஜய் தேவரகொண்டா, KGF யாஷ், நம்மூரு ஹரீஷ் கல்யாண் போன்றவர்கள் வந்த பிறகு தாடி மீதான மோகமும் காதலும் இளைய தலைமுறையிடம் அதிகரித்திருக்கிறது. அதனால் தான் மீசையையே விரும்பாத பாலிவுட் பிரபலங்களான ரன்வீர் சிங் போன்றவர்கள் தற்போது அழகழகான தாடி வளர்க்க ஆரம்பித்துவிட்டார்கள்

ஈரப்பசையை தக்கவைப்பது
முகச்சருமம் சுலபமாக ஈரப்பசையை இழந்து கடினமாகி விடும், தாடி வளர்க்க இந்த ஈரப்பசை முக்கிய காரணி, எனவே மாய்ஸ்ச்சரைசர் அல்லது தாடிக்கென்றே விற்கப்படும் பியர்டு ஆயில் (beard oil) மூலம் கடினமான சருமப்பகுதிகளில், குறிப்பாக மீசைக்கு கீழே உள்ள பகுதியில், ஈரப்பசையை தக்க வைக்க வேண்டும்.