முதல் படமே 30 கோடி ரூபாய் – தெறிக்க விட தயாரான சரவண அருள்

முதல் படமே 30 கோடி ரூபாய் – தெறிக்க விட தயாரான சரவண அருள் – ஹீரோயின் யாரு தெரிஞ்சா தூக்கி வாரிப்போட்டுடும்.!
பிரபல துணிக்கடை அதிபர் சரவண அருள். தன்னுடைய கடை விளம்பரங்களில் தானே நடித்து விளம்பர பட நடிகர்களின் வாய்பை பறித்தார். அது, அவரின் துணிக்கடைக்கு நல்ல விளம்பரத்தை கொடுத்ததோ, இல்லையே கடையின் ஓனர் அருளுக்கு நல்ல விளம்பரம் கொடுத்துவிட்டது.

இன்று இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு, இந்த பக்கம் தமன்னா, அந்த பக்கம் ஹன்ஷிகா என ஜோடி போட்டு ஆடி பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகி விட்டார் அருள்.
இந்நிலையில், இவர் கடையின் விளம்பரங்களை இயக்கும் ஜேடி, ஜெர்ரி என்ற இரண்டு இயக்குனர்கள் ஒன்றாக சேர்ந்து அருளை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டனர் என்று தகவல்கள் வெளியாகின.

இப்போது, கதை, ஸ்க்ரிப்ட் எல்லாம் ஒகே ஆகிவிட்டது என்றும் இன்னும் சில மாதங்களில் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது என்றும் தகவல்கள் வந்துள்ளது. தீபாவளி வேற வந்து விட்டது. இந்நேரம் கலக்கலான ஒரு விளம்பர படத்தை எடுத்திருப்பார் அருள்.

இன்னும் இரண்டு மாதத்திற்கு தொலைகாட்சி பெட்டிக்குள் புகுந்து ஒரு கலக்கு கலக்கபோகிறார் என்பது மற்றும் உண்மை. இந்நிலையில், இவர் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிகை தமன்னா ஹீரோயினாக நடிக்க அழைப்பு விடுத்துள்ளார்களாம். இதுவரை மறுப்பு தெரிவிக்காமல் இருக்கிறாராம் தமன்னா. அநேகமாக, தமன்னா தான் அருளின் முதல் படத்தில் ஜோடியாக நடிப்பார் என்று தெரிகின்றது.🌐