கட்ச் தலைவர்கள் இன்று சிறப்பு பூஜை…

பெரியாரை அஸ்திரமாகக் கொண்டு வளர்ந்த திராவிட கட்சியின் தலைவர்கள் இன்று ஒட்டு வாங்க பகுத்தறிவு பூஜை.

தூத்துக்குடி மக்களவைதொகுதி, தற்போது நட்சத்திர அந்தஸ்தை பெற்றுவிட்டது என்றே சொல்லலாம். பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும், திமுக சார்பில் அக்கட்சியின் மகளிரணி செயலாளர் கனிமொழியும் நேருக்கு நேர் மோதுகின்றனர்.

முருகன் வெற்றி வாகை சூடிய ஸ்தலமான திருச்செந்தூர் கோவிலில், கடந்த ஞாயிறு அதிகாலையில் தேர்தல் வெற்றிக்காக, சத்ரு சம்ஹார பூஜை நடத்தினார் தமிழிசை.

கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாளும், திருச்செந்தூர் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். தேர்தலில் கனிமொழி வெற்றி பெற வேண்டும் என்பதே தமது பிரார்த்தனை என்றார் ராஜாத்தி அம்மாள்.

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற வேண்டி, பாஜக வேட்பாளர் ஹெச். ராஜா, நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் சத்ரு சம்ஹார யாகம் நடத்தினார். ((இன்று அதிகாலை தனது குடும்பத்துடன் இக்கோவிலுக்கு சென்று, ஹெச். ராஜா சிறப்பு யாகத்தில் பங்கேற்றார்.

Leave a comment

Your email address will not be published.