Home மகளிர் ஆடை,அணிகலன் இப்படி ஒரு ஆடை யா ஆச்சாரத்தில் ரசிகர்கள்

இப்படி ஒரு ஆடை யா ஆச்சாரத்தில் ரசிகர்கள்

376

இப்படி ஒரு டிரஸ்ஸ போட்டுகிட்டு என்ன போயிருக்குனு தெரியுமா?

இப்பொழுது எதை எடுத்தாலும் பேஷன் பேஷன் என்ற எண்ணம் தான் மக்களிடையே நிலவி வருகிறது. சாதாரண பாமர மக்களே பேஷனுக்கு அடிமையாகி இருக்கும் போது செலிபிரிட்டிகளைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அதைத் தான் அவர்களுடைய ரசிகர்களும் விரும்புகிறார்கள். அப்படி தனது ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தை அளித்துள்ளார் நம் ஜான்வி கபூர். கொஞ்சம் நேரத்தில் ரசிகர்களுக்கு தேவதையே நேரில் வந்தது போல் இருந்தது என்று சொல்லும் அளவிற்கு அவரின் பேஷன் உடை எல்லோர் மனதிலும் இடம் பிடித்து உள்ளது.

ஜான்வி கபூர் ஆமாங்க நம்ம ஜான்வி கபூர் தற்போது நடந்த ஜீ சினி அவார்ட்ஸ் நிகழ்ச்சிக்கு பளபளக்கும் ரெட் கவுனில் வந்து மேடையையே அசத்தியுள்ளார். அதனுடன் அந்த ஆடைக்கு ஏற்றவாறு அவரது உதட்டில் தீட்டப்பட்ட அடர்ந்த சிவப்பு நிற லிப்ஸ்டிக்கும், மேலே உயர்த்தி போடப்பட்ட கொண்டை போன்ற ஹேர் ஸ்டைலும் அவை நிஜமாகவே தேவதையை போல காட்சியளிக்க செய்தது. அந்த இரவு நேர நிகழ்ச்சிக்கு அவர் நடந்து வரும் போது ஒட்டுமொத்த ரசிகர்களும் அவரைத்தான் திரும்பி பார்த்தனர். அந்தளவுக்கு அந்த ஆடையில் மின்னினார் என்றே கூறலாம். நீங்களும் ஜான்வி மாதிரி ஜொலிக்கனுமா அப்போ இன்னும் இந்தாங்க அந்த ரகசியம்.