66 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று புது டெல்லியில் அறிவிக்கப்பட்டன.

Congratulations 💐💐💐 Keerthy Suresh for Mahanati (Nadigayar Thilagam)
National Award.🌐

66 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று புது டெல்லியில் அறிவிக்கப்பட்டன.

நடிகை கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்கான விருதையும் நடிகர்கள் ஆயுஷ்மான் குரானா மற்றும் விக்கி கௌசல் சிறந்த நடிகருக்கான விருதையும் பெறுகின்றனர்.

மகாநட்டி எனும் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக கீர்த்தி சுரேஷ்க்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

இதே படம் தமிழில் நடிகர் திலகமாக வெளிவந்தது என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

ஆயுஷ்மான் குரானா க்கு அந்தாதுன் எனும் படத்துக்காகவும் விக்கி கோஷலுக்கு உரி என்னும் படத்திற்காகவும் இவ்விருது வழங்கப்படுகிறது

மகாநட்டி சிறந்த தெலுங்கு மொழி திரைப்படத்திற்கான விருதையும் பெற்றது.

ஹிந்தியில் பிரபலமாக விளங்கிய பத்மாவத் திரைப்படம் சிறந்த இசை மற்றும் சிறந்த நடனத்திற்கான விருதுகள் வென்றுள்ளது.
கன்னட படமான கே ஜி எஃப் சிறந்த ஆக்ஷன் மற்றும் சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் விருதுகளை வென்றது.🌐