Home செய்திகள் அரசியல் காலை செய்திகள் – மதன்

காலை செய்திகள் – மதன்

629

அரசியல் செய்திகள் :

சர்ச்சையை கிளப்பிய ஓபிஎஸ் மகன் கல்வெட்டு:

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூரில், சுயம்பு சனீஸ்வரபகவான் கோயில் உள்ளது. இந்த கோயில் வளாகத்திலேயே காசி ஶ்ரீ அன்னபூரணி கோயிலும் உள்ளது. நேற்று இந்தகோயிலில் கும்பாபிஷேகம். கோயிலுக்கு உதவி புரிந்தவர்களின் பெயர்களில் ஓ.பன்னீர்செல்வம், ஓ.பி.ஜெயபிரதீப் குமார், ஓ.பி.ரவீந்திரநாத் குமார் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

இன்னும் தேர்தலே முழுசா முடியல, வாக்கும் எண்ண ஆரம்பிக்கல, முடிவு எப்படி இருக்க போகுதோ தெரியல, ஆனால் அதுக்குள்ள தேனி எம்பி ரவீந்திரநாத் பெயர் எப்படி போட்டார்கள், இதுக்கு கோயில் நிர்வாகம் எப்படி அனுமதி தந்தது என்றெல்லாம் தெரியாமல் தேனி மாவட்ட மக்கள் குழம்பி உள்ளனர்.

 

ஆர்எஸ்எஸ்ஸும் இந்துக்களும் ஒன்றல்ல.. வேறு வேறு..

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே, என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் குறிப்பிட்டார். இந்த கருத்து தேசிய அளவில் பெரிய வைரலாகி உள்ளது. பலர் இது குறித்து தொடர்ந்து விவாதித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று அரவக்குறிச்சியில் கமல் பிரச்சாரத்தின் போது முட்டை வீசி தாக்கப்பட்டார். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் மநீம தலைவர் கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார்

இதுகுறித்த கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன், தீவிரவாதம் என்பது எல்லா மதங்களிலும் இருக்கிறது. ஒரு தாக்குதல் நடக்கும் போது அதை கவனமாக கையாள வேண்டும். ஒரு அமைப்பிற்கு பின் யார் இருக்கிறார்கள் என்பதை ஆராய வேண்டும். இந்துக்கள் எல்லோரும் ஆர்எஸ்எஸ் கிடையாது. இந்துக்கள் யார் ஆர்எஸ்எஸ் யார் என்று மக்களுக்கு தெரியும். சிலர் இவர்கள் எல்லோரும் ஒரே நபர்கள்தான் என்று கூறுவார்கள். ஆனால் மக்களுக்கு உண்மை தெரியும். இந்துக்கள் எல்லோரும் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் கிடையாது. கோட்சே ஓர் இந்து தீவிரவாதி என நான் கூறியதில் எந்த தவறும் இல்லை. பிரிவினையாக பேசும் ஆட்களை மக்கள் புரிந்து கொள்வார்கள், என்று கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

 

மோடியை கடுமையாக விமர்சிக்கும் அகிலேஷ் யாதவ்!

தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பே அங்கு ரதயாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டதற்கு கூட இதுதான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்கு எல்லாம் மமதா அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து கடந்த செவ்வாய் கிழமை அங்கு நடந்த பிரச்சாரத்தில் பெரிய கலவரம் ஏற்பட்டது. அமித் ஷா தலைமையில் நடந்த பிரச்சாரத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கலவரம் செய்தனர். இந்த கலவரத்தில் பொதுச் சொத்துக்கள் அதிக அளவில் சேதப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து அகிலேஷ் யாதவ் தற்போது பேட்டி அளித்துள்ளார்.

தோல்வி பயம் மோடிக்கு வந்துவிட்டது. அதனால்தான் அவர் மேற்கு வங்கத்தை நோக்கி திரும்பி இருக்கிறார். உத்தர பிரதேசத்தை போல மேற்கு வங்கமும் பெரிய மாநிலம்தான். அதனால்தான் அவர் அந்த மாநிலத்தை நோக்கி சென்று இருக்கிறார். அங்கு 10 இடங்களாவது வெற்றிபெற முடியுமா என்று அவர் நினைக்கிறார். உத்தர பிரதேசத்தில் விட்டதை பிடிக்க மோடி நினைக்கிறார். ஆனால் அங்கும் மக்கள் அவருக்கு ஆதரவு அளிக்க மாட்டார்கள். மேற்கு வங்க மக்கள் பாஜகவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நான் மேற்கு வங்க மக்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன்.

நீங்கள் உத்தர பிரதேசம் போல பாஜகவை புறக்கணியுங்கள். நீங்கள் மமதாவை தேர்வு செய்யுங்கள். அவர்தான் உங்கள் எதிர்காலம், என்று அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டு இருக்கிறார்.

 

சினிமா செய்திகள்:

படப்பிடிப்பை ரத்து

சரண் டைரக்‌ஷனில், ராதிகா சரத்குமார் தாதாவாக நடித்து வரும் படம், ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’

90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது. ஒரு சண்டை காட்சியும், ஒரு பாடல் காட்சியும் மட்டும் படமாக்க வேண்டியிருக்கிறது. அந்த காட்சிகளை இலங்கையில் படமாக்க திட்டமிட்டு இருந்தோம்.

அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததால், இலங்கை படப் பிடிப்பை ரத்து செய்து, அதற்கு பதில் புதுச்சேரியில் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்து இருக்கிறோம்.’

 

பேய் அட்டகாசம்:

துள்ளாத மனமும் துள்ளும், தீபாவளி, பூவெல்லாம் உன் வாசம், மனம் கொத்தி பறவை, வெள்ளக்கார துரை ஆகிய படங்களை டைரக்டு செய்த எழில்.

‘‘இது, ஒரு கிராமத்து பேய் கதை. படத்தின் கதையை, ‘‘ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட பாதிப்பு’’ என்று ஒரே ஒரு வரியில் சொல்லி விடலாம். அவள் பேயாக வந்து செய்யும் அட்டகாசங்கள்தான் படம். சாம்ஸ், சதீஷ் இருவரும் நகைச்சுவை வேடங்களில் நடிக்கிறார்கள்.

சத்யா இசையமைக்கிறார். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். முருகன் எழுதிய கதைக்கு திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்து வருகிறேன். படம், திருநெல்வேலியில் வளர்ந்து வருகிறது. முக்கிய காட்சிகளை பாங்காக்கில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறோம்.

 

உலக செய்திகள்:

தொழில்நுட்ப துறையில் அவசர நிலை பிரகடனம் – டிரம்ப்:

சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொலைதொடர்பு நிறுவனம் ஹூவாய். இந்நிறுவனம், ஈரான் மீது தாங்கள் விதித்த தடைகளை மீறி அந்நாட்டுடன் வர்த்தகம் வைத்ததோடு, மறைமுகமாக நிதியுதவி அளித்து வருவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது

இந்த விவகாரம் தொடர்பாக ஹூவாய் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மெங் வாங்சோ கடந்த ஆண்டு கனடாவில் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் ஹூவாய் நிறுவனம் தயாரிக்கும் மென்பொருட்களை பயன்படுத்தி, சீனா பிறநாடுகளில் உளவு பார்த்து வருவதாக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் சந்தேகம் எழுப்பி வந்தன.

அத்துடன் ஹூவாய் நிறுவனத்தின் 5-ம் தலைமுறை செல்போன் ‘நெட்வொர்க்’ (5ஜி) சேவை ஆராய்ச்சிக்கும் எதிர்ப்புகள் கிளம்பின.

இந்நிலையில், அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட அறிவுசார் விவகாரங்கள் திருடப்படுவதையும், உளவு பார்க்கப்படுவதையும் தடுக்கும் வகையில், தகவல் தொழில்நுட்ப துறையில் அவசர நிலையை பிரகடனம் செய்து, ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார்.

இதற்கான நிர்வாக உத்தரவில் அவர் கையெழுத்திட்டார். அதில், எந்தவொரு வெளிநாட்டு நிறுவனத்தின் பெயரையும் குறிப்பிடவில்லை என்ற போதிலும், சீனாவின் ஹூவாய் நிறுவனத்தை குறிவைத்துத்தான் இந்த உத்தரவை அவர் பிறப்பித்திருப்பதாக கூறப்படுகிறது.

 

ரூ.778 கோடிக்கு ஏலம் போன ஓவியம்:

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் கிளாட் மொனெட். அந்நாட்டின் நார்மண்டி பிராந்தியத்தில் வசித்து வந்த இவர் கடந்த 1890-ம் ஆண்டு, கிராமப்புற வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் வைக்கோல் போரை ஓவியமாக தீட்டினார்.

கிளாட் மொனெட் வரைந்த ஓவியங்களில் மிகவும் தனித்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் இந்த ஓவியம் வெவ்வேறு நாடுகளில் ஏலத்தில் விடப்பட்டு, பல கோடி ரூபாய்க்கு விற்பனையாகி இருக்கிறது.

இந்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சோத்பி ஏல நிறுவனம் கிளாட் மொனெட்டின் வைக்கோல் ஓவியத்தை அண்மையில் ஏலத்தில் விட்டது.

ஏலம் தொடங்கிய 8 நிமிடங்களில் இந்த ஓவியம், 110.7 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் ரூ.778 கோடி) ஏலம் போனது. இந்த ஓவியம் 100 மில்லியன் டாலருக்கு அதிகமாக ஏலம் போனது இதுவே முதல் முறையாகும். கிளாட் மொனெட்டின் ஓவியங்களில் அதிக விலைக்கு விற்பனையான ஓவியம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

விளையாட்டுச் செய்திகள்:

ஒரு வேகப்பந்து வீச்சாளரை சேர்த்து இருக்க வேண்டும்

இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அணியின் முன்னேற்றத்தில் பவுலர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். இந்திய அணியில் தரமான ஒரு வேகப்பந்து வீச்சாளர் குறைவாக இருப்பதாக நான் நினைக்கிறேன். கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளரை சேர்த்து இருக்க வேண்டும்.- கம்பீர் கருத்து.

 

தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தது ஏன்?

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இதில் 2-வது விக்கெட் கீப்பராக 21 வயது இளம் வீரரான ரிஷாப் பான்டுக்கு பதிலாக 33 வயதான தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தது சர்ச்சையானது. ரிஷாப் பான்டுக்கு வாய்ப்பு அளித்து இருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து இருந்தனர். அனுபவத்தின் அடிப்படையில் தினேஷ் கார்த்திக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது என்று தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் பதில் அளித்து இருந்தார்.

இந்த விவகாரம் குறித்து எந்த கருத்தும் சொல்லாமல் மவுனம் காத்து வந்த கேப்டன் விராட்கோலி முதல்முறையாக தனது மவுனத்தை கலைத்து இருக்கிறார். உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டதற்கு அவரது அனுபவமே முக்கிய காரணமாகும். நெருக்கடியான சூழ்நிலையில் அவர் அமைதியாக நிலைத்து நின்று பேட்டிங் செய்யும் திறமை படைத்தவர். இந்த விஷயத்தை தேர்வு குழுவினர் உள்ளிட்ட அனைவரும் ஒப்புக்கொண்டனர்.