Home செய்திகள் இந்தியா ஜாமீன் மனு 2வது முறையாக தள்ளுபடி!

ஜாமீன் மனு 2வது முறையாக தள்ளுபடி!

528

வைர வியாபாரி நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை லண்டன் நீதிமன்றம் 2-வது முறையாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மும்பையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு லண்டன் தப்பிச் சென்ற நீரவ் மோடி கடந்த 19-ந் தேதி கைது செய்யப்பட்டார். லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது காவல் நேற்று முடிவடைந்த நிலையில், வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீரவ் மோடி சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு இந்தியா தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களை கலைத்து விடுவார் என இந்திய அதிகாரிகள்  தெரிவித்தனர்

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி மேரி மல்லான் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் ஏப்ரல் 26-ந் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்தும் உத்தரவிட்டார். ஏற்கனவே கடந்த 20ம் தேதி ஜாமீன் கோரி நீரவ் மோடி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.