புதிய வசதியை உருவாக்கியுள்ள வாட்ஸ் அப்

வாட்ஸ் அப்பில் வரும் தகவல்களின் உண்மைத் தன்மையை கண்டறியும் புதிய வசதியை அந்நிறுவனம் உருவாக்கி உள்ளது.

வாட்ஸ்அப்பின் முக்கிய பிரச்னையாக இருப்பது போலிச்செய்திகள் பரவுவது. இதனை தடுக்க வாட்ஸ் அப் நிறுவனம் பல மாறுதல்களை கொண்டு வருகிறது.  பயனாளர்களின் தேவைக்கு ஏற்பவும், பயன்பாட்டுக்கு எளிதாகவும் அவ்வப்போது அப்டேட்டுகளை வாட்ஸ் அப் கொடுத்து வருகிறது

இந்நிலையில் வதந்தியை தடுக்க வாட் அப் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது. வதந்தியாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கும் குறிப்பிட்ட தகவலை +91- 96 43 – 000 – 888 என்ற எண்ணிற்கு அனுப்பலாம் என்றும், அதற்காக பணியமர்த்தப்பட்டுள்ள பணியாளர்கள் அத்தகவல் உண்மையானதா? தவறானதா? உள்நோக்கத்துடன் கூடியதா என்பது உள்ளிட்ட விளக்கங்களை அனுப்பி வைப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் குறுந்தகவலையோ அல்லது படங்களையோ, படக்காட்சிகளையோ அனுப்பி விளக்கம் பெற முடியும் என வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது. தனியார் தொழில் முனைவு நிறுவனத்தின் உதவியுடன் தகவல் சரிபார்ப்பு சேவையை  வாட்ஸ் அப்  வழங்க உள்ளது. எனினும் தற்போது இவ்வசதி ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, வங்காளம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் மட்டுமே வழங்கப்படும் என்றும் பிறகு மற்ற மொழிகளுக்கும் விரிவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் இவ்வசதியை வாட்ஸ் அப்  கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.