Home சினிமா ராதாரவியின் பேச்சுக்கு நயன்தாரா கண்டனம்

ராதாரவியின் பேச்சுக்கு நயன்தாரா கண்டனம்

459

கொலையுதிர்காலம் பட விழாவில் தன்னைப் பற்றி ராதாரவி தரக்குறைவாக பேசியது தொடர்பாக தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளார் நடிகை நயன்தாரா. நடிகை நயன் தாரா நாயகியாக நடித்துள்ள படம் கொலையுதிர்காலம். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நயன் மற்றும் அப்பட இயக்குநர் போன்றோர் கலந்து கொள்ளவில்லை. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ராதாரவி, நயன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக திரையுலகினரும், ரசிகர்களும் அவருக்கு எதிராக கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக ராதாரவியை திமுகவில் இருந்து அக்கட்சித் தலைவர் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்துள்ளார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடிகை நயன்தாரா தனது கண்டனத்தையும், திமுக தலைவருக்கு நன்றியையும் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.