சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு மாதம்தோறும் ஊதியத்துடன் சேர்த்து ரூபாய் 3000 ரேஷன் படியாக வழங்கப்படுகிறது.

சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு மாதம்தோறும் ஊதியத்துடன் சேர்த்து ரூபாய் 3000 ரேஷன் படியாக வழங்கப்படுகிறது. ஆனால் செப்டம்பர் 13ஆம் தேதியன்று சிஆர்பிஎஃப் விடுத்துள்ள சுற்றறிக்கையில், நிதிப்பற்றாக்குறை காரணமாக சிஆர்பிஎப் வீரர்களுக்கு செப்டம்பர் மாத ரேஷன் படி வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்திடம் இருந்து சுமார் 800 கோடி ரூபாய் நிதி நிலுவையில் இருப்பதாகவும், இது குறித்து ஏற்கனவே மூன்று முறை நினைவூட்டப்பட்டுள்ளதாவும் சிஆர்பிஎஃப் தெரிவித்துள்ளது.🌐