வாட்சாப்பில் ஊடுருவ முயன்ற ஹேக்கர்கள் மற்றும் பிற செய்திகள்

வாட்சாப் செயலியிலுள்ள மிகப் பெரிய குறைபாட்டை பயன்படுத்தி அவை நிறுவப்பட்டுள்ள திறன்பேசி உள்ளிட்ட மின்னணு கருவிகளில் ஹேக்கர்கள் கண்காணிப்பு மென்பொருட்களை பதிய முயன்றனர் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்சாப் செயலியின் குறிப்பிட்ட சில பயன்பாட்டாளர்களை மட்டும் இலக்கு வைத்து, ‘திறன்பெற்ற ஹேக்கர்’ இதை மேற்கொண்டதாக அந்நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலிலிருந்து ஏனைய வாட்சாப் பயன்பாட்டாளர்களை காப்பாற்றுவதற்கான மேம்படுத்தப்பட்ட பதிப்பை கடந்த வெள்ளிக்கிழமையன்று வாட்சாப் நிறுவனம் வெளியிட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வாட்சாப் செயலியின்… Continue reading வாட்சாப்பில் ஊடுருவ முயன்ற ஹேக்கர்கள் மற்றும் பிற செய்திகள்

புதிய வசதியை உருவாக்கியுள்ள வாட்ஸ் அப்

வாட்ஸ் அப்பில் வரும் தகவல்களின் உண்மைத் தன்மையை கண்டறியும் புதிய வசதியை அந்நிறுவனம் உருவாக்கி உள்ளது. வாட்ஸ்அப்பின் முக்கிய பிரச்னையாக இருப்பது போலிச்செய்திகள் பரவுவது. இதனை தடுக்க வாட்ஸ் அப் நிறுவனம் பல மாறுதல்களை கொண்டு வருகிறது.  பயனாளர்களின் தேவைக்கு ஏற்பவும், பயன்பாட்டுக்கு எளிதாகவும் அவ்வப்போது அப்டேட்டுகளை வாட்ஸ் அப் கொடுத்து வருகிறது இந்நிலையில் வதந்தியை தடுக்க வாட் அப் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது. வதந்தியாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கும் குறிப்பிட்ட தகவலை +91-… Continue reading புதிய வசதியை உருவாக்கியுள்ள வாட்ஸ் அப்