சி.பி.ஐ., அதிகாரியாக நடிக்கும் விவேக்…

சி.பி.ஐ., அதிகாரியாக நடிக்கும் விவேக்👇🏾

நடிகர் கமல்- இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் வெளியான ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம், 23 ஆண்டுகளுக்கு பின், தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில், நடிகர் கமலுடன் இணைந்து காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், ரகுல் பிரீத்சிங், சமுத்திரக்கனி, விவேக், வித்யுத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில், நடிகர் விவேக் சி.பி.ஐ. அதிகாரியாக நடிக்கவுள்ளார்.இதை, அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த படம், 2021 ஏப்ரலில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.