உலகத்தரத்துடன் இந்தியாவில் கட்டப்பட்ட ‘ஐ.என்.எஸ். காந்தேரி’ நீர்மூழ்கி போர்க்கப்பல்

உலகத்தரத்துடன் இந்தியாவில் கட்டப்பட்ட ‘ஐ.என்.எஸ். காந்தேரி’ நீர்மூழ்கி போர்க்கப்பல் கடற்படையில் சேர்ப்பு. 2-வது கல்வாரி வகை நீர்மூழ்கி கப்பலின் பெயர் ஐ.என்.எஸ். காந்தேரி. மும்பை மஜ்காவ் கப்பல் கட்டும் தளத்தில், இந்த கப்பல் கட்டப்பட்டது. உலகின் மிகச்சிறந்த நீர்மூழ்கி போர்க் கப்பலான இதன் எடை 1,615 டன் ஆகும். 221 அடி நீளமும், 40 அடி உயரமும் கொண்டது. பேட்டரியிலும், டீசலிலும் இயங்கும் இந்த போர்க்கப்பல் கடலுக்கு அடியில் மணிக்கு 37 கிலோ மீட்டர் (20 கடல் மைல்) வேகத்திலும், கடல் மேற்பரப்பில் 20 கிலோ மீட்டர் (11 கடல் மைல்) வேகத்திலும் இயங்க கூடியது. இந்த நீர்மூழ்கி கப்பல் கடலுக்குள் இருந்தபடியும், கடலின் மேற்பரப்புக்கு வந்தும் எதிரிகளின் கப்பல்களை ஏவுகணையை வீசி தாக்கும் திறன் கொண்டது. எதிரி கப்பல்களின் கண்ணுக்கு புலப்படாமல் தாக்கும் வல்லமை கொண்டது. இந்த கப்பல் கட்டமைக்கப்பட்டு, கடந்த 2½ ஆண்டுகளாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. வெற்றிகரமாக சோதனை ஓட்டத்தை முடித்த நிலையில், இதனை கடற்படையில் இணைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நேற்று மும்பை கடற்படை தளத்தில் நடந்தது.🌐