உச்ச நீதிமன்ற உத்தரவுபடி மராடு அடுக்குமாடி குடியிருப்பு இடிக்கப்படும்:

உச்ச நீதிமன்ற உத்தரவுபடி மராடு அடுக்குமாடி குடியிருப்பு இடிக்கப்படும்: கேரள அரசு உறுதி. கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் கடலோர ஒழுங்குமுறை மண்டல (சிஆர்இசட்) விதிகளை மீறியதற்காக மராடு அடுக்குமாடிக் கட்டிடங்களை இடிக்கும்படி, கடந்த மே 8 -ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. குடியிருப்பில் உள்ளவர்கள் யாரும் காலி செய்யாததால் கேரள அரசு இன்னும் கட்டிடத்தை இடிக்க இயலாத நிலையில் உள்ளது.
@ ‘‘மராடு அடுக்குமாடி குடியிருப்பு விவகாரத்தில் கேரள அரசின் திட்டம் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. பில்டருக்கு எதிராக நடவடிக்கையை தொடங்கியுள்ளோம். சொத்துக்கள் முடக்கப்படும். உச்ச நீதிமன்ற வழங்காட்டுதல் படி அடுக்குமாடி குடியிருப்பை இடிக்கும் பணிகள் தொடங்கும்’’ – கேரள மாநில தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ்🌐