தமிழ்நாட்டிற்கு வெளியே “போஸ்டிங்”.. அண்ணாமலையை “ஆஃப்” செய்ய முடிவு.. டெல்லி பயங்கர வியூகம்.. ஷாக்

சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலை இனி அதிமுக பற்றி பெரிதாக எதுவும் பேச வாய்ப்பே இல்லை. 5 மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் கர்நாடகாவில் கொடுக்கப்பட்டது போல அவருக்கு இந்த 5 மாநில தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்படலாம், என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நிலவி வந்த அதிமுக – பாஜக மோதலில் தற்போது பலத்த அமைதி நிலவி வருகிறது. இரண்டு தரப்பும் எதுவும் கருத்து தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறது. நேற்று நடந்த பாஜக கூட்டத்தில் கூட அதிமுகவிற்கு எதிராக எதுவும் பேச கூடாது என்று முடிவுகள் எடுக்கப்பட்டதாகதெரிகிறது . இந்த நிலையில்தான் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு டெல்லி முக்கியமான கட்டளை ஒன்றை பிறப்பித்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பேட்டி: அதில்., அதிமுக பாஜக முறிவு தொடர்பாக அதிமுக உறுதியாக ஒரு முடிவை அறிவித்துவிட்டனர் . லோக்சபா தேர்தலில் கூட்டணி கிடையாது. 2026 தேர்தலிலும் கூட்டணி கிடையாது என்ற முடிவை எடுத்துவிட்டனர். ஆனால் இதே முடிவில் உறுதியாக இருப்பார்களா என்று தெரியாது. தேர்தல் நேரத்தில் இதே முடிவில்தான் இருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் பாஜக பற்றி பேச கூடாது. பாஜகவை விமர்சனம் செய்ய கூடாது என்று எடப்பாடி உத்தரவிட்டு இருக்கிறார். இந்த உத்தரவிற்கு பின் என்ன காரணம் என்று தெரியவில்லை.

இதனால் கூட்டணி மீண்டும் ஏற்பட்டாலும் ஏற்படலாம். சமீபத்தில் காவிரி விவகாரத்தில் கூட மத்திய அரசை எடப்பாடி எதிர்பார்க்கவில்லை. திமுகவிற்கும் எங்களுக்கும்தான் போட்டி என்று அண்ணாமலை கூறி இருக்கிறார். ஆனால் அதற்கும் கூட எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதிமுக இதை நினைத்து இருந்தால் எதிர்த்து இருக்கலாம், நாங்கள்தான் எதிர்க்கட்சி. எங்களுக்கும் திமுகவிற்கும்தான் போட்டி என்று கூட சொல்லி இருக்கலாம்.

அண்ணாமலை பேட்டி: ஆனால் அப்படி சொல்லவில்லைனு. இவர்கள் அமைதியாக இருந்துவிட்டனர். அதற்கு என்ன காரணம் ? அப்படி இருக்க இவர்கள் கூட்டணி மீண்டும் ஏற்படுமா ? எதிர்காலத்தில் கூட்டணி வைத்து கொள்வதற்கு வசதியாக அவர்கள் இந்த முடிவை எடுத்து உள்ளனரா? இப்போது அமைதி காக்கின்றனரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக – பாஜக முடிவை மேலிடங்கள்தான் தீர்மானிக்கும். தேர்தல் வரை இவர்கள் தீர்மானிக்க மாட்டார்கள். இப்போதைக்கு இந்த பிரச்சனை பெரிதானது.

பிரச்சனை அப்படியே ஆறப்போடப்பட்டு இருக்கும். அது தேர்தல் நேரத்தில் சரி செய்யப்படும். இரண்டு தரப்பும் எதிர் தரப்பை பற்றி எதுவும் பேச மாட்டார்கள். அப்படியே அவர்கள் அவர்கள் வேலையே பார்ப்பார்கள். தேர்தல் பணிகளை செய்வார்கள். தேர்தல் நேரத்தில் வேண்டுமானால் கூட்டணியை ஏற்படுத்துவார்கள். அதுவரை அண்ணாமலை அதிமுக பற்றி பேச மாட்டார். அவர் கட்சி பணிகளை செய்வார். கட்சிக்காக அடிமட்ட பணிகளை செய்வார்.

தேர்தல் மீது கவனம் செலுத்துவார். அதிமுக பற்றி அவர் பெரிதாக எதுவும் பேச வாய்ப்பே இல்லை. 5 மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் கர்நாடகாவில் கொடுக்கப்பட்டது போல அவருக்கு இந்த 5 மாநில தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்படலாம். இங்கிருந்து அவர் அனுப்பப்படலாம். கர்நாடகாவிற்கு அனுப்பப்பட்டது போல.. 5 மாநில தேர்தலில் ஏதாவது பொறுப்பு கொடுத்து அண்ணாமலையை ஆஃப் செய்யும் வாய்ப்புகளை நான் பார்க்கிறேன்.அதனால் இப்போதைக்கு அதிமுக – பாஜக மோதலில் பெரிய மோதல்கள், சண்டைகள் வரவில்லை, என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *